(Reading time: 11 - 22 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

”உண்மையை சொல்லு உன்னாலதானே அந்த கார்மெண்ட்ஸ் தீபிடிச்சி எரிஞ்சது” என கேட்க அதற்கு கார்கோடகனின் உருவமோ கலகலவென சிரித்து

  

”ஆமாம் என்னாலதான்”

  

”ஏன் அப்படி செய்த அந்த மக்கள் என்ன பாவம் செய்தாங்க, உன்னோட கோபம் எங்க மேலதானே அதுக்காக எங்களை பழிவாங்கியிருக்கலாமே, எதுக்காக அப்பாவி மக்களை கொன்ன”

  

”அப்பாவி மக்களா அவங்க கீழவீதி மக்கள், என் ஆளுங்க மேல் வீதியாளுங்க யாருமே தீயில சிக்கலை, சரியான நாளா பார்த்து கீழவீதியாளுங்களை கார்மெண்ட்ஸ்ல தங்க வைச்சேன், அன்னிக்கு நானே எல்லா இடத்திலயும் பெட்ரோல் ஊத்தினேன், எலக்ட்ரிக் லைன் அதுல போட்டேன் பத்திக்கற மாதிரி பத்த வைச்சேன் கார்மெண்ட்ஸே எரிஞ்சி அழிஞ்சது, அதுல இருந்த கீழவீதி மக்களும் செத்தாங்க, அந்த நாள் என்னால மறக்கவே முடியாது எனக்கு ரொம்ப சந்தோஷமான நாள்”

  

”சீ நீயெல்லாம் ஒரு மனுஷனா இவ்ளோ கொலைவெறி பிடிச்சவனா இருக்கியே”

  

”இதுக்கு பேரு கொலைவெறி இல்லை, கௌரவம் ஊரை ஒண்ணாக்கி நீ பெரிய தப்பு செய்துட்ட, அதுக்கு அப்புறம் ஊருக்குள்ள என்ன நடந்தது தெரியுமா, அதுவரைக்கும் கீழவீதியாளுங்க மண்ணை பார்த்து நடந்தாங்க, எதிர்த்து பேச மாட்டாங்க ஆனா, உன்னால அவங்க எல்லாருக்கும் புது தைரியம் வந்துடுச்சி, மேல வீதி ஆளுங்களைப் பார்த்து  எதிர்த்து பேசினாங்க, நிமிர்ந்துப் பார்த்தானுங்க, எங்களை ஏதோ ஈனப்பிறவிகளை போல கேவலமா பார்த்தாங்க, அதுலயும் என்னை எவ்ளோ கேவலமா பேசினாங்க தெரியுமா, அந்த ஆத்திரத்தில எல்லாரையும் கொல்லனும்னு நினைச்சேன், திட்டம் தீட்டினேன், வெற்றிகரமா எல்லாரையும் கொன்னு என் ஆத்திரத்தை அடக்கிக்கிட்டேன்”

  

”எங்களை எதுக்காக கொன்ன”

  

”உங்களை நான் கொல்லலையே“

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.