”நாச்சியா உன்னை அடையாம நான் போக மாட்டேன், என் ஆசையே நீதான், நீயா உன்னை எனக்கு தந்தா நான் உன்னை அனுபவிச்சிட்டு போயிடுவேன் இல்லைன்னா நீ ரொம்ப கஷ்டப்படுவ”
”முடியாது உன்னால என்னை தொடக்கூட முடியாது”
”பேயா இருக்கற உன்னை என்னால தொடமுடியாது ஆனா, இந்த பிறவியில பிறந்து வந்திருக்கற இந்த நாச்சியாவை என்னால அடைய முடியுமே” என கார்கோடகன் வெறிகொண்டு இளம் வயது நாச்சியாவை பிடிக்க வர அதைத் தடுத்தான் சங்கமேஸ்வரன்
”டேய் என்னடா காரியம் செய்ற முதல்ல உயில் பத்திரத்தை கண்டுபிடிச்சி, அழிக்கனும் அப்பதான் என் ஆசை நிறைவேறும்”
”யோவ் போய்யா உன் ஆசை உனக்கு என் ஆசை எனக்கு, நானும் இப்படி ஆசை தீராம ஆவியா சுத்தறதை விட இவளை அடைஞ்சி என் ஆசையை நிறைவேத்திக்கிட்டு சாந்தியடையலாம்னு இருக்கேன்“
”அப்போ என் நிலைமை”
”உனக்கு வேணும்னா இதோ உன் மனைவியை பிடிச்சிக்க, உயில் எங்கயிருக்குன்னு அந்தம்மாவுக்குதான் தெரியும்” என சொல்ல சங்கமேஸ்வரன் உடனே தன் மனைவி ஆண்டாளை பிடிக்க கார்கோடகன் இளம்வயது நாச்சியாவை பிடிக்க வர அவனை தடுத்து நிப்பாட்டினாள் நடுத்தர வயது நாச்சியா. இளம் வயது நாச்சியாவோ பயந்து ஒரு ஓரமாக நிற்க அவளை பின்னால் இருந்து பிடித்தான் அகத்தியன், அதில் அவள் அலற வாய் திறக்க அவளின் வாயை பொத்தினான்
”கத்தாத நான்தான் பயப்படாத” என சொல்ல அவள் சற்று அமைதியானாள், அதில் அவன் தன் கையை இறக்க அவளோ