Page 16 of 29
”நந்தினி”
“அத்தான்”
“இந்த அத்தானுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை”
என கத்த அவளும் அமைதியாகி தலைகுனிந்துக்கொண்டாள். அதில் பரிதாபமடைந்தவன்
”இங்க பாரு என்னைப்பாரு” என அமைதியாக சொல்ல அவளும் அவனை பார்த்தாள்.
”எனக்கு வீட்ல கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கறாங்க தெரியும்ல”
“அண்ணா சொன்னாரு”
“ம் என்ன முடிவு பண்ணியிருக்க”
“எதைப்பத்தி”
“உன் வாழ்க்கையை பத்தி”
“அண்ணா எனக்கு கல்யாணம் செஞ்சி வைக்கப்போறதா சொன்னாரு”
“அதுக்கு உன் முடிவு என்ன”
“அவர் விருப்பம்னு சொன்னேன்”
“ஏன் அப்படி சொன்ன”
”வேற வழியில்லை அதனால சொன்னேன்”