இதுல இன்னொரு பொண்ணோட வாழ்க்கையில விளையாடறது தப்பு அண்ணா”
“இப்ப என்னதான்டா சொல்ல வர்ற எனக்கு நந்தினியை தரமாட்டியா”
“தாராளமா தரேன் அதுக்கு நீங்க அவளை லவ் பண்ணியிருக்கனும் அதான் இல்லைன்னு சொல்லிட்டீங்களே சும்மா அந்த 3 பொண்ணுங்களுக்கு பயந்து ஒதுங்கறதுக்காக என் தங்கச்சியை இழுக்காதீங்க ஊர்ல என்ன பொண்ணுங்களா இல்லை எவளையாவது கூட்டிட்டு போய் நிறுத்துங்க என் தங்கச்சி ஒண்ணும் ஏமாளி இல்லை உங்க கிட்ட ஏமாந்து போறதுக்கு. நான் இருக்கேன் அவள் பக்கத்தில, யாராலயும் அவளை ஏமாத்த முடியாது”
“நான் ஒண்ணும் அவளை ஏமாத்த மாட்டேன்”
“அட போங்கண்ணா இதையே சொல்லுங்க, ஆனா லவ் பண்றேன்னு மட்டும் சொல்லாதீங்க நீங்க சொன்னாதானே அவளும் உங்க மேல ஆசைப்படுவா, உங்களுக்காக உங்க வீட்டுக்கு வருவா, நீங்க எதையுமே சொல்லாம வா வான்னா எப்படி வருவா”
“நான் அவளை லவ் பண்றேனா இல்லையான்னு எனக்கு தெரியல எனக்கே என் மேல சந்தேகமா இருக்கு, அவள் வேணும்னு தோணுது அதுதான் லவ்வான்னு தெரியலை அதான் குழம்பி போய் இருக்கேன்”
”எனக்கு குழப்பமே இல்லை நான்தான் ஆரம்பத்திலிருந்து உங்களை பார்க்கறேனே அவளை நீங்க லவ் பண்றீங்க”
“அப்படியா அது ஏன் எனக்குத் தோணலை“
“அது உங்களுக்குதான் தெரியனும்”
“எனக்கு தெரிஞ்சாதானே நான் சொல்ல முடியும்”
“சரி வேணா ஒண்ணு பண்றேன் நந்தினி கிட்ட பேசறேன் அவளுக்கும் உங்களை பிடிச்சிருந்து