தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 28 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தியாகராஜனின் கையை மெல்ல தன் கரத்தால் தடுத்த கிருத்திகா, மெல்லியதாக புன்னகை புரிந்தாள்.
“ஹி ஹி ஹி! சாரி கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்,” என்றப்படி தன் விழிகளின் அருகே இருந்த சின்ன கண்ணீர்த்துளிகளை தள்ளி விட்டாள்.
பின் அருகே நின்றிருந்த தியாகுவைப் பார்த்து, கண்ணை சிமிட்டி விட்டு,
“அதுக்காக பழைய ஞாபகமே வரக் கூடாதுன்னு நினைக்குற கெட்ட புத்தி எல்லாம் எனக்கு இல்லை. உங்க கிருத்திகாவா பழைய ஞாபகம் வந்தப்புறம் இந்த சில நாட்கள் ஞாபகமே இல்லாம போகலாம். ஸோ, நான் எவ்வளவு நாள் இருக்க போறேனோ தெரியலை! ஆனால் நான் லக்கி. யாருக்கு இப்படி எல்லாம் ஒரு குடும்பம் கிடைக்கும். இன்னைக்கு அத்தை கொட்டின பாச மழைல அசந்து போயிட்டேன். ஊரில இருந்தப்போ அண்ணா, அம்மா கூட அப்படி தான். இருக்கும் வரைக்கும் சந்தோஷமா இருக்க போறேன்,” என்றாள்.
“குட், நல்ல முடிவு தான்,” என்றான் தியாகு மென்மையாக!
“தேங்க்ஸ் மிஸ்டர் ஸ்டோன் ஸ்டேச்யூ!”
“என்னது ஸ்டேச்யூவா?????”
“ஆமாம், உங்களுக்கு நான் வச்சிருக்கும் செல்ல பேர். நீங்க தான் ராஜ்ன்னு கூப்பிடாதேன்னு சொல்லிட்டீங்களே, இனிமேல் எஸ்.எஸ்’ன்னு கூப்பிடுறேன், இல்லைனா ஸ்டோன் ஸ்டேச்யூன்னே கூப்பிடுறேன்!”
“இது இப்போ முக்கியமா?”
“எனக்கு முக்கியம்! இங்கே பாருங்க, இனிமேல் அப்பப்போ வள் வள்ன்னு குறைக்காம நல்ல பையனா ஃப்ரீயா என் கிட்ட பேசுங்க. எனக்கு உங்களை பிடிக்கும், ஆனால், உங்களுக்கு பிடிக்காத எதையும் நான் செய்ய மாட்டேன், சரியா?”