(Reading time: 7 - 14 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

   

“எனக்கு அட்வைஸ் செய்றது இருக்கட்டும், நீ ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ. நீயும் கிருத்திகா உள்ளேயே இருப்பவ தான். என்ன, உனக்கு இப்போ சில சம்பவங்கள் நினைவில்லை, அவ்வளவு தான். பழைய ஞாபகம் வந்தாலும் இப்போ நடக்குறதெல்லாம் கூட நினைவில இருக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க. நீ பாட்டுக்கு எதையாவது யோசிச்சு குழப்பிக்காதே.”

   

“அது என்னவோ போங்க!!!! இன்னைக்கு தேவைக்கு அதிகமா ரொம்பவே என்னை யோசிக்க வச்சுட்டீங்க. இன்னொரு தடவை அதை மட்டும் செய்யாதீங்க!”

   

புன்னகையில் முகம் மின்ன சொன்ன கிருத்திகா, சட்டென எழுந்து தியாகராஜன் எதிர்பாராத நேரத்தில் அவனின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள்!

   

“இதுக்கு நீங்க என்னை திட்ட முடியாது! ஏன்னா நீங்க தான் நானும் கிருத்திகாவின் வடிவம்னு சொன்னீங்க. அப்போ உங்களுக்கு தான் ரெஸ்ட்ரிக்ஷன் எல்லாம், எனக்கில்லை!”

   

குறும்புத்தனம் மின்ன சொல்லிவிட்டு அவனின் பதிலுக்காக நிற்காமல் தட்டை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றாள் அவள்.

   

❀✿❀✿❀✿

   

தியாகு அசையாமல் நின்றிருந்தான்! சற்று முன் கிருத்திகா சொன்னதுப் போல கற் சிலையாகவே நின்றிருந்தான்!

   

அவனுள் பல பல கேள்விகள் தோன்றி இருந்தது!

   

இவளை என்ன செய்வது????

   

மனைவி போல தோற்றம் உடைய வேறு பெண் என்றால், தங்கையாகவோ தோழியாகவோ நினைத்து பேசலாம், பழகலாம். அவளிடமும் அதையே சொல்லலாம்!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.