(Reading time: 7 - 14 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

வெட்கப் படுறேன்னு ரசிச்சவர்.”

   

“ஹேய்!”

   

“இருங்க இருங்க! நான் இன்னும் சொல்லி முடிக்கலை. அப்புறம் ஒன்ஸ் அபான் அ டைம், விஜய் அண்ணா கல்யாணத்துல என்னை பார்த்ததும் கிளீன் போல்டாகி, உள்ளே frog போற அளவுக்கு வாயை பிளந்து பார்த்தவர். சரி, இவர் டைவர்ஸ் அப்படி இப்படின்னு எல்லாம் முறுக்கிகிட்டு இருக்காரேன்னு நான் விஜய் அண்ணா கல்யாண டைம் மாதிரி சாரீ கட்டிட்டு வந்தா, அனிமேஷன் படத்துல கண்ணு பிதுங்கி வெளியே வர மாதிரி, கண்ணெல்லாம் வெளியே விழுற அளவுக்கு பார்வை பார்த்த நல்லவர்!”

   

தேவை இல்லாமல் தானே வாய் கொடுத்து மாட்டிக் கொண்டது புரிந்து என்ன செய்வது என்று யோசித்தான் தியாகு.

   

கிருத்திகா தொடர்ந்து பேசிக் கொண்டே போனாள்.

   

“அப்புறம், அண்ணா கிட்ட பேசுறேன் பேர்வழின்னு ஒரு ஓரமா நின்னு சைட்டோ சைட்டுன்னு அடிக்குறதுல எக்ஸ்பர்ட். இப்படி எல்லாம் செஞ்சுட்டு, என்னவோ ஏதோன்னு நான் குழம்பி போய் வேற ஒரு பொண்ணு உங்க லைஃப்ல இருக்காளான்னு கேட்டா, ஆமாம்ன்னு உடனே பொய் சொல்ற நல்லவர், வல்லவர்!”

   

தியாகு அசந்துப் போய் நின்றிருந்தான்!

   

அவனைப் பார்த்து ஒரு நமட்டு புன்னகை கொடுத்து விட்டு, “இவ்வளவையும் செய்துட்டு, அப்புறம் நீ என் மனைவியே இல்லைன்னு டையலாக் பேசுற சூப்பர் ஹீரோ! என்ன போதுமா உங்க புகழ் மாலை, இன்னும் வேணுமா???” என்றாள் கிருத்திகா!

   

“வேண்டாம், வேண்டாம். போதும் போதும்! உன் கிட்ட நான் பேச்சு கொடுத்திருக்கவே கூடாது.”

   

“ஹாங்! இது சரி! இபோ தான் ஸ்மார்ட்டா பேசி இருக்கீங்க.”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.