(Reading time: 7 - 14 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

   

ஆனால் இவளோ, அவனின் மனைவி என்பதையே மற்றவர் மூலம் தெரிந்துக் கொண்டு, பழைய நினைவுகள் எதுவுமில்லாமலே அவன் மீது இவ்வளவு அதிகமான அன்பை வைத்திருக்கிறாள்! இவளை என்னவென்று சொல்வது????

   

அதுவும் அவன் அவனின் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று கனவு கண்டானோ அதே போல அச்சு பிசகாமல் இருப்பவளிடம் இருந்து அவன் தள்ளி இருப்பது எப்படி?

   

இன்னைக்கு அத்தை கொட்டின பாச மழைல அசந்து போயிட்டேன்,’ என்று இன்று சொல்பவள் தான், முன்பு அவனிடம், ‘பாசமா இருக்கேன்னு மேல வந்து விழாத குறையா கொஞ்சினா நான் என்ன செய்றது. எனக்கு இதெல்லாம் பிடிக்கலை,’ என்றும் சொன்னவள்!

   

அவனுக்கு தலையை பிய்த்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது!

   

அதற்குள் தட்டை கழுவி விட்டு வந்த கிருத்திகா, தியாகு அப்போதும் அதே இடத்தில் நிற்பதை பார்த்து விட்டு அவனின் அருகே வந்தாள்.

   

அவனின் கண்ணின் முன் கையை அசைத்துக் காட்டியவள்,

   

“ஹலோ, ஸ்டோன் ஸ்டேச்யூன்னு பேரு தான் வச்சிருக்கேன்னு சொன்னேன். ஸ்டேச்யூவா உங்களை நிற்க சொல்லலை! காலு வலிக்கப் போகுது. போங்க போய் படுத்து தூங்குங்க,” என்றாள்.

   

தியாகராஜன் கிருத்திகாவை மியூசியத்தில் பார்க்கும் அரியப் பொருளை பார்ப்பது போல பார்த்தான்.

   

“என்ன?? உங்க மனசு என்ன சொல்லுது???? தெரியாம அவசரப்பட்டு வாயை விட்டுட்டோமே, இவ இவ்வளவு ஸ்மார்ட்டா க்யூட்டா இருக்காளேன்னு ஃபீல் செய்யுதா????”

   

கிருத்திகா குறும்பு மின்ன கேட்க, தியாகராஜன் அவளைப் பார்த்து முறைத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.