கிருத்திகாவோ சிரித்தாள். அந்த சிரிப்பின் ஊடே, “ஆக்ச்சுவலி, நான் ஹீரோவா, நீங்க ஹீரோயினா இருந்திருக்கனும். அப்பப்போ ‘பே’ன்னு ஒரு லுக் விடுறீங்க! அதை ஹீரோயின் செய்தா ரசிக்கலாம்! ஹீரோ செய்தால் சகிக்கலை,” என்றாள்!
தியாகுவின் முகத்தில் அவனையும் மீறி சின்ன புன்னகை தோன்றியது.
“ஹாங்! இது என் செல்ல ஸ்டோன் ஸ்டேச்யூவிற்கு அழகு! இந்த ஸ்மைலோடவே கிளம்புங்க!”
“ம்ம்ம்ம்... போனா போதுன்னு பார்த்தா ரொம்ப பேசுறீயே, நான் உன்னை கலாட்டா செய்ய ஆரம்பிச்சா அவ்வளவு தான் தாங்க மாட்ட! ஏதோ போனா போகுதுன்னு விட்டு வச்சிருக்கேன்! உங்க அண்ணா கிட்ட என்னை பத்தி கேட்டு பாரு!”
“யாரு? அண்ணி முந்தானையை பிடிச்சுட்டு அவங்க பின்னாடியே பூனை மாதிரி சுத்திட்டு இருக்க வீராதி வீர, சூராதி சூர ஃப்ரென்டை தானே சொல்றீங்க???”
“அதெல்லாம் வேற! என்னை பத்தி கேட்டு பாரு!”
“க்கும்! அதை பத்தி வேற நான் அவர் கிட்ட கேட்கனுமாக்கும்! உங்களை பத்தி எனக்கே தெரியும்.”
“என்ன தெரியும்? சொல்லு பார்ப்போம்.”
“சீரியஸா தானே கேட்குறீங்க???”
“ஆமாம் ஆமாம்!”
“அப்போ ஓகே! அன்னைக்கு கார்ல டைவர்ஸ் நோட்டிஸ் காட்டிட்டு நான் ஒரு சொட்டு கண் கலங்கின உடனே, என்ன என்னன்னு உருகினவர்! அந்த பேச்சு முடியுறதுக்குள்ளேயே நான்