(Reading time: 29 - 57 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

“பேர் வைச்சி கூப்பிடறது தப்பு அத்தான்”

   

“நான் ஒண்ணும் உன் புருஷன் இல்லையே புருஷன் பேரைத்தான் பெண்கள் கூப்பிடக்கூடாதுன்னு செல்ல பேர் வைச்சி கூப்பிடுவாங்க என்னங்க ஏங்கன்னு சொல்வாங்க அதுவும் இல்லைன்னா உன்னை மாதிரி அத்தான் மாமா மச்சான்னு கூப்பிடுவாங்க நீ என்னை புருஷனா நினைச்சிதான் அத்தான்னு கூப்பிடறியா” என ரிஷி மெயின் பாயிண்டுக்கு வர நந்தினிக்கு ஆமாம் என சொல்ல வேண்டுமென்பது போல் இருந்தது.

   

 ரிஷிக்கோ இந்த கேள்விக்கு பதில் அவள் இல்லை என சொல்லிவிடக்கூடாதுன்னு நினைத்தான். திடீரென்று ஒரு ஆழ்ந்த மௌனம் ஏற்பட்டது. இருவரிடமும் பேச்சுக்கள் இல்லை. அவள் பதில் கூறட்டும் என அவனும் அமைதிகாத்தான். அவளும் எப்படி சொல்வது சொன்னால் என்னாகும் என்ற பீதியில் அவளும் அமைதியாக இருந்தாள். இருவரின் மூச்சுவிடும் காற்றின் சத்தம் மட்டும் போனில் மாறி மாறி கேட்டுக்கொண்டிருந்தது.

   

5 நிமிடம் கழித்து ….

   

நந்தினியே பொறுக்க முடியாமல் 

   

”அத்தான்” என ஈனஸ்வரத்தில் அழைத்தாள்

   

”உன் அத்தான்தான் லைன்லதான் இருக்கேன் பதில் சொல்லும்மா”

   

“அது எனக்கு உங்களை பிடிச்சிருக்கு அத்தான் அதனால இப்படி கூப்பிடறேன்”

   

“ஓ அவ்ளோதானா”

   

“ஆமாம்”

   

“சந்தோஷம்” என அமைதியானான் மறுமுனையில் ரிஷியிடமிருந்து எந்த சத்தம் வராததை பார்த்து

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.