(Reading time: 29 - 57 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

“அப்படி எதுவும் இருக்காது தாத்தா நான் பார்த்துக்கிறேன் போன் வைச்சிடறேன்” என சொல்லிவிட்டு போனை கட் செய்தவன் 5 நிமிடம் ஏதோ தீவிர யோசனைக்குப்பின் ரிஷிக்கு போன் செய்தான். 

   

அவனது போனை பார்த்ததும் எடுக்காமல் கட்செய்தான் ரிஷி. அவனது இந்த செயலைக்கண்டு சந்தேகம் அதிகமாக உடனே நந்தினிக்கு போன் செய்தான். அவளது போனில் ரிங் போய் உடனே கட் ஆகவும் அவனது சந்தேகம் ஊர்ஜிதமானது. அவசரமாக ஹாஸ்டலுக்கு போன் செய்து விசாரித்து நந்தினி அங்கு இல்லையென தெரிந்துக்கொண்டான். பதட்டமாகி மறுபடியும் ரிஷிக்கே போன் செய்தான். ஆனால் மறுபடியும் போன் கட் ஆகவும் பரப்பரப்பாக எழுந்து ரெடியாக ஆரம்பித்தான்.

   

ரிஷியின் ஏசி காரில் நந்தினியை பக்கத்தில் அமர வைத்துக்கொண்டு காலை 7 மணிக்கு மகாபலிபுரம் நோக்கி வண்டியை ஒரு சீரான வேகத்தில் ஓட்டிக்கொண்டிருந்தான். அவன் எதுவும் பேசாமல் இருக்கவே அவளும் பேசாமல் இருந்தாள். 

   

ஹைவே ரோடு வந்தபின்னாடியும் அவளிடமிருந்து எந்த பேச்சும் வராமல் போகவே ரிஷி அவள் முகத்தை பார்த்தான். அதில் சிறிது கலவரம் இருக்கவே சந்தேகம் வந்து

   

”என்னாச்சி உனக்கு ஏன் டென்ஷனா இருக்க”

   

“இல்லை அத்தான் நீங்க பாட்டுக்கு அண்ணா போன் பண்ணா கட் பண்ணிட்டீங்களே அவர் ஏதாவது தப்பா நினைச்சிருந்தா என்ன செய்றது”

   

“அவன் கிடக்கறான் நீ பயப்படாத நான் பார்த்துக்கறேன் அந்த போனை கொடு கொஞ்சம்”

   

“எதுக்கு அத்தான்”

   

“நீ கொடு” என கேட்க அவளும் தர அதை சுவிட்ச் ஆப் செய்தான்

   

”அத்தான் என்ன இது எதுக்கு சுவிட்ச் ஆப் பண்ணீங்க”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.