(Reading time: 29 - 57 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

“சரி உட்காரு இப்பவே போகனும்னு அவசியமில்லை இன்னும் அரை மணி நேரம் இருக்கு உட்காரு பில் வரட்டும் போகலாம் வா அதுக்குள்ள ஐஸ்க்ரீம் சாப்பிடுவ” என அவளை அழைத்து சேரில் அமரவைத்தவன் அவள் பக்கத்தில் அமர்ந்துக்கொண்டு அவள் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டிருந்தான். மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக ஐஸ்க்ரீம் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவளை ஆசையாக பார்த்தான்.

   

”நந்தினி” என அன்பாக அழைக்க

   

”அத்தான்” என்றாள் ஆசையாக

   

”நீ அத்தான்னு கூப்பிடறப்ப கேட்க எவ்ளோ இனிமையா இருக்கு தெரியுமா”

   

“அப்படியா அத்தான்”

   

“ஆமாம்”

   

“உங்களை வேற யாரும் இப்படி கூப்பிட்டதில்லையா”

   

“இல்லையே”

   

“யாருமேவா”

   

“யாரும் இல்லை”

   

“உங்க கூட படிச்ச பொண்ணுங்க கூடவா”

   

“நான் லண்டன்ல படிச்சேன் அங்க இருக்கற கலாச்சாரத்தை பத்தி உனக்கே தெரியுமே”

   

“இல்லை அத்தான் எனக்கு வெளிநாடுகளைப் பத்தி தெரியாது”

   

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.