(Reading time: 29 - 57 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

அவளின் இந்த செயலால் கவரப்பட்டவன் இன்னொரு முத்தம் தர அவள் அதற்கும் மறுப்பு தெரிவிக்காமல் அந்த முத்தத்தை நினைத்து ரசித்துக்கொண்டிருந்தாள். 

   

அதற்குள் கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் இருவரும் சுயநிலை பெற பேரர் வந்து பில் நீட்டினான். அந்த பில்லிற்கு பணம் கொடுத்து கூடவே டிப்பும் கொடுத்தவன் அவன் நகராமல் இருக்கவே

   

”என்ன அதான் பணம் கொடுத்துட்டேனே இப்ப என்ன”

   

“சார் உங்களை தேடி அர்ஜூன்னு ஒருத்தர் வந்திருக்காரு” என சொல்லவும் நந்தினிக்கு காலில் தீப்பற்றிக்கொண்டது போல உடனே பயந்து எழுந்துக்கொள்ள அவளது கையை பிடித்தான்

   

”எங்க போற” நந்தினியிடம் கத்தினான் ரிஷி

   

“அண்ணா வந்துட்டாரு நான் போறேன்” என அவனிடம் இருந்து தப்பித்துக்கொண்டு வெளியே ஓடினாள். அதைப்பார்த்த ரிஷி அந்த பேரரிடம்

   

”உனக்கு நான் பணம் கொடுத்தது எதுக்குன்னு சொல்லு”

   

“உங்களை தொந்தரவு செய்யாம இருக்கனும்னு”

   

“நீ பாட்டுக்கு அவளோட அண்ணனை கூட்டிட்டு வந்திருக்க”

   

“சார் எனக்கு தெரியாது சார் மேடமோட அண்ணன்தான் வந்திருக்காருன்னு”

   

என அவன் பயந்து பயந்து சொல்ல ரிஷியும்

   

”எங்க இருக்கான்”

   

”வெளிய சார் டிபன் சாப்பிட்டுக்கிட்டு இருந்தாரு. அவரோட பில்லையும் உங்க கிட்டயே வாங்கிக்க சொன்னாரு”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.