(Reading time: 29 - 57 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

பிரிந்து காரை ஹாஸ்டலை நோக்கி ஓட்டலானான்.

   

ரிஷியும் தனது காரை ஓட்டிக்கொண்டு சரியாக அர்ஜூன் காரிடம் சரிக்கு சமமாக ஓட்டிக்கொண்டு வந்தவன் கண்ணாடி கதவை இறக்கிவிட்டு தன் பக்கத்தில் வந்த அர்ஜூனின் காரை பார்த்து 

   

”அர்ஜூன் அர்ஜூன்” என கத்த அர்ஜூனும் ஆச்சர்யப்பட்டு கண்ணாடி கதவை இறக்கிவிட்டு கத்தினான் 

   

”என்ன அண்ணா ஏதாவது பிரச்சனையா”

   

“ஆமாம்டா நீதான் என் பெரிய பிரச்சனையே நான் நந்தினிகிட்ட பேசனும்”

   

“முடியாதுண்ணா நீங்க வீடு போய் சேருங்க இன்னிக்கு ஏதோ மீட்டிங் இருக்காம் அப்பா உங்களை அவசரமாக கம்பெனிக்கு வரசொன்னாரு நீங்க கம்பெனிக்கு போங்க நான் அப்புறமா உங்களை தேடி வரேன்” என சொல்லிவிட்டு காரின் வேகத்தை அதிகப்படுத்தி முன்னோக்கி செல்ல அவனிடம் பேசுவது இனி அநாவசியம் என நினைத்த ரிஷி தன் காரை வேகப்படுத்தி இம்முறை நந்தினி இருந்த பக்கமாக ஓட்டி சரியாக அவள் பார்க்கும் படி கத்தினான்

   

”நந்தினி நந்தினி இங்கபாரு என்னைப்பாரு” என கத்த அவளும் பார்த்து கண்ணாடி கதவை இறக்க முயன்றவளை அர்ஜூன் தடுத்தான்.

   

அதைக்கவனித்த ரிஷிக்கு கோபமே வந்து தன் காரின் வேகத்தை அதிகப்படுத்தி முன்னோக்கி ஓட்டிலானான். வேகமாக ஓட்டிக்கொண்டு சென்ற ரிஷியை பார்த்து நிம்மதியடைந்தவன் காரை சீரான வேகத்தில் ஓட்டலானான். நந்தினியை அவளது ஹாஸ்டலில் விட்டுவிட்டு நேராக கம்பெனிக்கு வந்தவன் அங்கு ரிஷி மீட்டிங்கில் கோபமாக பேசுவதையும் அதனால் எதிரில் இருப்பவர்கள் பலியாவதையும் பார்த்து அங்கு இருந்து எஸ்கேப் ஆனான்.

   

இவ்வளவு கோபம் இருந்தும் மீட்டிங்கை நல்லபடியாகவே முடித்து வெற்றி பெற்ற ரிஷிக்கு மட்டும் சந்தோஷமே இல்லை. பல கோடி ரூபாய் ப்ராஜெக்ட்க்கான மீட்டிங் அது. நல்ல ஆஃபர் கிடைத்த சந்தோஷத்தில் அனைவருமே குதூகலமாக இருக்க ரிஷி மட்டும் எதையோ 

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.