”அப்படியா அப்ப நான் தான் சரியா பார்க்கலை போல எழுந்து நில்லு ஒரு முறை பார்க்கறேன்” என அவன் சாதாரணமாக சொல்ல அவளுக்கு வெட்கமே வந்து
”போங்க அத்தான்” என்றாள் வெட்கப்பட்டு அவளின் வெட்கத்தைக்கண்டவன் அவளுக்கு எதிர்புறமாக அமர்ந்து இருந்தவன் சட்டென எழுந்து அவள் பக்கத்தில் நெருக்கமாக அமர்ந்துக்கொண்டான். அதற்குள் ஆர்டர் செய்த இட்லி பொங்கல் தோசை பூரி காபி ஐஸ்க்ரீம் என அனைத்தும் டேபிளை நிரப்பி வைத்துவிட்டு பேரரும்
”வேற ஏதாவது வேணுமா சார்” என கேட்க
”இதை சாப்பிட எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும்”
“எனக்கு புரியுது சார்” என அவன் ஒரு மார்க்கமாக சிரிக்கவும் தன் பர்சில் இருந்த 500 ரூபாயை எடுத்து அவனிடம் நீட்டவும் அவன் சந்தோஷமாக வெளியே சென்று காவலுக்கு நின்றுவிட்டான். அவன் சென்றதும் ரிஷியும் நந்தினிக்கு பரிமாறினான்
”நான் போட்டுக்கறேன் அத்தான்”
“பரவாயில்லை இரு நான் பரிமாறி விடறேன் நீ நல்லா சாப்பிடு அப்பதான் பேச முடியும்” என அவன் சொல்ல அவனை வியப்பாக பார்த்துவிட்டு மெதுவாக சாப்பிட ஆரம்பித்தாள். அரை மணி நேரத்தில் இருவரும் சாப்பிட்டு முடித்ததும் கை கழுவி விட்டு வெளியே செல்ல எத்தனித்த நந்தினியின் கையை பிடித்து இழுத்தான்.
”என்ன அத்தான்”
“ஐஸ்கிரீம் சாப்பிடலையா”
“இப்பவே வயிறு புல்லா இருக்கு அத்தான்”
good epi Sasi.waiting for next epi.thanks & good luck.