“சரிவிடு என்கிட்ட நிறைய பொண்ணுங்க பேசினாலும் அது நட்பாதான் இருக்கும் அதை தாண்ட நான் விட்டதில்லை”
“ஏன் அத்தான் அவங்க அழகாயிருக்க மாட்டாங்களா”
“உன்னை விட இல்லை. அப்படியே அவங்க அழகாயிருந்தாலும் நான் ஏன் அவங்க கிட்ட பேசப்போறேன் சொல்லு”
“ஓ அத்தான் உங்க கிட்ட ஒண்ணு கேட்கனும்”
“கேளு தரேன்” என அருகில் வரவும் அவளுக்கு கூச்சமாக இருந்தது
”அத்தான் என்ன செய்றீங்க”
“நான் எதுவும் செய்யலையே”
“நான் பேச நினைச்சேன்”
“நானும் நீ பேசறத கேட்க நினைச்சேன்”
“ஓ சாரி அத்தான் நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்” என வழிந்தாள் நந்தினி
”வேற என்ன நினைச்ச”
“ஒண்ணுமில்லை அத்தான்” என தலை குனியவும் அவன் சிரித்தவாறே அவளிடம் மெதுவாக
”பயப்படாத உன் அனுமதியில்லாம உனக்கு நான் முத்தம் தரமாட்டேன்” என அவன் சொல்ல சட்டென தலையை தூக்கி அவனைப்பார்த்து வியந்தவள் உடனே வெட்கப்பட்டு சிரிக்கவும் அவனுக்கு இப்போது ஆசையே அதிகமானது. மெதுவாக அவள் கன்னத்தில் முத்தம் தந்தான் ரிஷி. அவளும் கண்மூடி எந்த வித எதிர்ப்பும் இன்றி அவனது முத்தத்தை ஏற்றுக்கொண்டாள்.
good epi Sasi.waiting for next epi.thanks & good luck.