பறிகொடுத்தது போல எண்ணி வீட்டை அடைந்தான். அவனது சோகத்தைக்கண்ட தாத்தாவும் அர்ஜூனிடம் உண்மை அறிந்துக் கொண்டு சிரித்துவிட்டு மேற்கொண்டு ரிஷி என்ன செய்கிறான் என பார்க்கலானார்.
அந்த நாள் இரவும் ரிஷிக்கு கசப்பாகவே இருந்தது. வேண்டா வெறுப்பாக அவன் தூங்க ஆரம்பித்தான்.
ஆனால் நந்தினிக்கோ அந்த இரவு மிகவும் இன்பமாக இருந்தது ஓட்டலில் ரிஷி தந்த முத்தத்தையே நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டவள் அதன் விளைவாக தூக்கத்தை தொலைத்தாள்.
மறுநாள் காலை
காலையில் ரிஷிக்கு போன் வர மெதுவாக அதை எடுத்துப்பார்த்தான் அதில் நந்தினி என இருக்கவும் அவசரமாக ஆன் செய்து பேசலானான்.
”நந்தினி”
“அத்தான்”
“சொல்லு சொல்லு” என ஆர்வமாக கேட்க அதற்கு அவள்
”நான் ரெடியாயிட்டேன் அத்தான்”
“எதுக்கு”
“அப்ப நீங்க இன்னிக்கு வரலயா” என சோகமாக சொல்ல ரிஷிக்கு அப்போதுதான் உரைத்தது
”சும்மா சும்மா கேட்டேன் இதோ வரேன் அங்கயே இரு வந்துட்டேன்” என அவசரமாக குளிக்காமல் கொள்ளாமல் பறந்தான் ரிஷி.
good epi Sasi.waiting for next epi.thanks & good luck.