(Reading time: 29 - 57 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

ரிஷியை இன்று காண்பதற்காகவே தன்னை அதிகமாக அலங்கரித்துக்கொண்டு ஹாஸ்டல் தாண்டியிருந்த பஸ்ஸ்டாப்பில் காத்திருந்தவள் முன்னாடி கார் வந்து நிற்கவும் அவளும் ஆசையாக ஏறிக்கொண்டு ரிஷியை பார்த்தாள். அவனோ குளிக்காமல் கொள்ளாமல் அப்படியே தூக்க கலக்கத்தில் ஓடி வந்திருப்பதைப்பார்த்து சோர்ந்து போனாள்.

   

”என்ன அத்தான் இப்படி இருக்கீங்க”

   

“அது நைட் சரியா தூங்கலைம்மா அதான்”

   

“அதுக்குன்னு இப்படியா என்கிட்ட சொல்லியிருந்தா நான் வெயிட் பண்ணியிருப்பேனே”

   

“நீ வெயிட் பண்ணியிருப்பே உன் அண்ணன் வந்து நின்னுருப்பானே அவனை யார் சமாளிக்கறது”

   

“சரி அதுக்காக இப்படியா வருவீங்க”

   

”இல்லை போற வழியில ஓட்டல்ல ரூம் எடுத்து குளிச்சிடறேன்”

   

”மாத்திக்க துணி”

   

“பின்னாடி இருக்கு பாரு” என சொல்ல அவளும் திரும்பி பின் சீட்டை பார்க்க அங்கு ஒரு டிராவல் பேக் இருக்கவும் புரியாமல் அவனையே பார்த்தாள்

   

”எங்க போகப்போறோம் அத்தான் பேக் எல்லாம் கொண்டு வந்திருக்கீங்க”

   

“அது சும்மா சும்மா” என சொல்லி அவசரமாக ஒரு உயர்ரக தங்கும் வசதி கொண்ட ஓட்டலில் காரை நிறுத்தியவன் பேக்கை எடுத்துக்கொண்டு நந்தினியை அழைத்துக்கொண்டு ஓட்டலுக்குள் சென்று ஒரு  சிங்கிள் ரூம் எடுத்தவன் அந்த ரூமிற்குள் சென்றதும் அவளை டிவி பார்க்க சொல்லி விட்டு அவசரமாக குளிக்க சென்றான். 

   

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.