(Reading time: 29 - 57 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

“பரவாயில்லை விடு அவன் சும்மாவேயிருக்க மாட்டான். போன் பண்ணிக்கிட்டே இருப்பான் அதான் சரி என்னை பார்க்கனும்னு சொன்ன வந்துட்டேன் எதுவும் பேசாம அமைதியாவே இருந்தா எப்படி இன்னும் கொஞ்ச நேரத்தில மகாபலிபுரம் வந்துடும்”

   

“அங்க போய் பேசலாமே அத்தான்”

   

”ம் சரி” என சொல்லிவிட்டு காரின் வேகத்தை கூட்ட 10 நிமிடத்தில் மகாபலிபுரத்தில் இருந்தார்கள் இருவரும்.

   

காரை ஓரமாக பார்க்கிங்கில் பார்க் செய்தவன் அவளை அழைத்துக்கொண்டு கடல் இருக்கும் இடத்திற்கு வந்தான். அலைகள் வந்து வந்து சென்றுக்கொண்டிருக்க அங்கே ஓரளவு மக்கள் கூட்டம் இருந்தது. அதில் அவர்களும் ஒரு இடமாக பார்த்து மணல் தரையில் அமர்ந்துக்கொண்டு கடலை வேடிக்கை பார்த்தனர். காலையில் கடல் அலைகள் மினுமினுப்பாக தெரிய அந்த ஒளி நந்தினி முகத்தில் பட முகத்தின் நிறம் மாறி அழகு கூடியது.

   

கடலையே பார்த்துக்கொண்டிருந்தாள் நந்தினி அவளின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் ரிஷி. இன்று அவள் சிவப்பு நிற பாவாடையில் வெள்ளை நிற பூ போட்ட தாவணி அணிந்திருந்தாள். அதில் அவள் மிகவும் எடுப்பாக இருந்தாள். பெரிதாக எந்த மேக்கப்பும் இல்லை. இயற்கையான அழகு. ரிஷி வருகிறான் என தெரிந்ததும் பூவாங்கி தலையில் வைத்திருந்தாள். தங்க நகை என எதுவும் அவள் அணிந்திருக்கவில்லையென்றாலும் அழகாகவே இருந்தாள். அவளது கால் கொலுசு கூட அவன் கண்ணுக்கு அற்புதமாக தெரிய அவள் முகத்தை விட்டு கொலுசை ஆராய்ச்சி செய்துக்கொண்டிருந்தான். எதேச்சையாக அதைப்பார்த்த நந்தினி முகம் சிவந்து தன் காலை மறைத்துக்கொண்டவள் அவனை பார்த்து வெட்கப்பட  அதைப்பார்த்த ரிஷிக்கு சிரிப்பே வந்தது

   

”என்னாச்சி உனக்கு ஏன் இப்படி வெட்கப்படற நான்தானே பார்க்க கூடாதா என்ன”

   

“கூச்சமாயிருக்கு அத்தான்” என சொல்லி நெளியவும் அவனுக்கு மறுபடியும் சிரிப்பு வர அவளிடம் 2 அடி முன் நகர்ந்து அவளிடம் ஒட்டிக்கொண்டான் ரிஷி. அவனது அந்த நெருக்கம் 

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.