(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

மேலே கேள்விகள் கேட்கும் முன்பே அங்கிருந்து நகர்ந்தாள்!

   

யோசனையுடன் தன் வேலையை தொடர்ந்தாள் இந்து! ஒன்றிரண்டு நிமிடங்கள் சென்றிருக்கும்! ஹாலில் இருந்து ஒரே சத்தமாக கேட்டது! நிறைய பேர் பேசுகிறார்கள் என்பது இந்துவிற்கு புரிந்தது! ஆனால், சரியாக குரல் புரியவில்லை. 

  

எதனாலோ இந்துவிற்கு அங்கே சென்று யார் என தெரிந்துக் கொள்ள தயக்கமாக இருந்தது. என்ன செய்வது என்று அவள் சிந்திக்கும் போதே, வீணாவும் கீதாவும் சமையலறையின் உள்ளே வந்தார்கள். கீதாவை அங்கே பார்த்ததும் இந்துவிற்கு இரட்டிப்பு ஆச்சர்யமாக இருந்தது! ஆனால், கீதா, வீணா இருவர் முகத்திலும் இருந்த எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் மலர்ச்சி அவளுக்கு  கேள்வியை கொடுத்தது! மனதை மறைக்காமல் இந்து அவர்களை கேள்வியாக பார்த்துக் கொண்டே,

   

"கீதா அக்கா?????" என்றாள்.

   

"இந்து, எனக்கு இப்போ தான் உயிரே வந்தது! அத்தை நல்லா நம்ம எல்லோரையும் நல்லா ஏமாத்திட்டாங்க," என்றாள் கீதா முகம் இன்னும் அதிகமாக மலர்ந்து பிரகாசிக்க!

   

"என்ன கீதா அக்கா?? எனக்கு ஒன்னும் புரியலை," என்றாள் இந்து குழப்பத்துடன்!

   

"ஹாலுக்கு வா இந்து உனக்கே எல்லாம் புரியும்! ஆனாலும் இது என்ன கோலம் இந்து???? இன்னும் கொஞ்ச நாள் உன்னை இப்படியே விட்டிருந்தா அப்படியே காத்துல கரைஞ்சுப் போயிருப்ப போல இருக்கே!!!" 

   

"ப்ச்... கீதா அக்கா!"

   

"சரி, சரி, ரொம்ப அலுத்துக்காதே! வா,

{/f90filter}

வா," என்று கிட்டத்தட்ட இந்துவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு கீதா நடக்கவும், வீணா புன்னகையோடு, கேஸ் ஸ்டவ்வை அணைத்து விட்டு அவர்கள் இருவர் பின்னே சென்றாள்.

   

 🌼🌸❀✿🌷

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.