(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

   

கேள்வியோடு வந்த இந்து, ஹாலில் பார்த்த காட்சியில் மயக்கம் போட்டு விழாதது தான் குறை! அங்கே இருந்த அர்ச்சனா, காஞ்சனா, பேச்சில் மட்டும் அல்லாமல் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும், அறையின் நடுவே இருந்த மேஜையில் வைக்கப் பட்டிருந்த தட்டுக்களும் இந்துவிற்கு எதையோ சொன்னது. ஆனால் நம்ப தான் அவளுக்கு தயக்கமாக இருந்தது! 

   

தயக்கத்துடன் அங்கிருந்த மற்றவர்களை பார்த்தவளின் கண்கள், சுழன்று, ராஜீவின் அருகில் அமர்ந்திருந்த சஞ்சீவின் மீது சென்று நிலைத்தது! மற்ற அனைவரின் முகத்தில் இருந்த மலர்ச்சி சுத்தமாக அவன் முகத்தில் இல்லை! பெயருக்கு கூட ஒரு புன்னகை கூட இல்லை! ஏதோ கற் சிலை போல் அமர்ந்திருந்தான்!

   

இந்து குழப்பத்துடன் நிற்க, அப்போது தான் அவளை கவனித்த காஞ்சனா,

   

"இந்து, என்ன இது இப்படி உன் முகம் வாடிப் போயிருக்கு??? உடம்பு ஏதாவது சரியில்லையா என்ன?" என விசாரித்தாள்!

   

அவசரமாக பார்வையை திருப்பி, இல்லை என்பது போல் தலை அசைத்தாள் இந்து.

   

"இந்து, உன் கிட்ட நான் நிறைய விஷயம் சொல்லனும். உங்க அம்மா அன்னைக்கு சஞ்சீவ் கல்யாணம் பத்தி பேசினப்போவே எனக்கு சந்தேகம் தான். சரி, சஞ்சீவ், கீதா, ராஜீவ் யாராவது ஏதாவது சொல்வாங்கன்னு வெயிட் செய்தேன். ஆனா, யாரும் எதுவும் சொல்ல காணும்! அப்படி யாராவது சொல்லி தானா உங்க ரெண்டுப் பேர் விஷயத்தையும் கண்டுபிடிக்கணும்!!! அது தான் சஞ்சீவ் கிட்டத் தட்ட பறை சாற்றாத குறையா, உன் பின்னாடியே சுத்திட்டு இருந்தானே! சரி, உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு, உன்னை கூப்பிட்டு பேசிட்டு, உங்க அம்மா கிட்ட பேசலாம்னு இருந்தேன். அதுக்குள்ளே உன் அம்மாக்கு உடம்பு சரி இல்லாம ஆகி என்னென்னவோ நடந்து போச்சு. அதன

{/f90filter}ால தான் அன்னைக்கு ஹாஸ்பிட்டலேயே உன் அம்மா கிட்ட சொல்லிட்டேன். லக்ஷ்மிக்கும் தெரியும்!"

   

"எனக்கும் அவினாஷுக்கும் கூட தெரியும்," என்றாள் வீணா குறுக்கிட்டு!

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.