"ராஜீவ் கல்யாணத்துக்கு இந்து வந்து திட்டிட்டுப் போனா! சஞ்சீவ் கல்யாணத்துக்கு வீணா வந்து...."
காஞ்சனாவை பேசி முடிக்க ணைமதிக்காம்ல், அவளின் பேச்சில் குறுக்கிட்டு,
"சாரி ஆன்ட்டி! நிஜமாவே சாரி!!! எனக்கு நீங்க எல்லாம் கூட இப்படி விளையாடுவீங்கன்னு தெரியாதுல," என்றாள் வீணா!
"பரவாயில்லைம்மா! எனக்கு உன்னை தெரியும்," என்றாள் காஞ்சனா ஈஸியாக!
மற்றவர்கள் அனைவரும் மகிழ்ச்சியும், கேலியும், கிண்டலுமாக பேசிக் கொண்டிருக்க, அந்த உணர்வுகளை பிரதிபலிக்காமல் அங்கே இருந்தது இரண்டே பேர் தான், அது சஞ்சீவும், இந்துவும்!
சஞ்சீவின் முகத்தில் புதிதாக கேள்விப் பட்ட விஷயத்தினால் கோபமிருந்தது என்றால், இந்துவின் முகத்தில், குழப்பம் இருந்தது!
மற்ற பேச்சுக்களின் நடுவே, அவர்கள் இருவரையும் முதலில் கவனித்தது கீதா தான்!
"நாம எல்லோரும் பேசி பேசி, நம்ம ஹீரோ, ஹீரோயினை மறந்துட்டோம்! என்ன சஞ்சீவ் சார், உங்களுக்கு இப்போ சந்தோஷம் தானே!!! அம்மாக்கு பிடிச்ச பொண்ணை தானே கல்யாணம் செஞ்சுக்க ஆசை பட்டீங்க," என்றாள் கீதா கண்கள் மின்ன!
சட்டென்று இந்துவின் முகம் கடுகடுத்தது!!!!
{/f90filter}
சஞ்சீவ் முகத்தில் பெரிதாக எந்த உணர்ச்சியும் தென்படவில்லை. சில வினாடி அமைதிக்கு பின்,
"அண்ணி, உங்க ஃப்ரென்ட் கிட்ட நான் கொஞ்ச நேரம் தனியா பேசணும்," என்றான்.