"அது தானே, லக்ஷ்மி உன் கிட்ட எதையாவது சொல்லாம மறைக்க முடியுமா என்ன!" என்றாள் அர்ச்சனா கேலியாக!
"நான் ஏன் என் மருமகள் கிட்ட மறைக்கனும்??? பாவம் அவளே ரொம்ப குழம்பிப் போயிருந்தா," என்றாள் லக்ஷ்மி.
"நீங்க ரொம்ப நல்லவங்க ஆன்ட்டி," என்றாள் கீதா.
காஞ்சனா முகத்தில் இருந்த புன்னகை பெரிதானது!
"இது எனக்காக நீ சொன்னதா கீதா? நீ மட்டும் என் கிட்டே எதையாவது சொன்னீயா??? என்னை அம்மா மாதிரி நினைச்சு எதையும் சொல்லலாம்ன்னு உன் கிட்ட எத்தனை தடவை சொன்னேன்?" என கீதாவை பார்த்து சொன்னாள் காஞ்சனா.
"சாரி அத்தை, நீங்க என்னை தப்பா நினைச்சிடீங்களா??"
"என்ன கீதா, இவ்வளவு தானா நீ என்னை புரிஞ்சுக்கிட்டது?"
"சாரி அத்தை!"
"சாரி எல்லாம் எதுக்கும்மா??? நீ எப்போவும் அடுத்தவங்க மனசு கஷ்ட பட கூடாதுன்னு தான் யோசிப்பேன்னு எனக்கு தெரியாதா என்ன?"
காஞ்சனாவும், கீதாவும் ‘சீரியல் மாடல்’ பேச்சை தொடர, "அடடா, செல்லம் கொஞ்ச ஆரம்பிச்ச
{/f90filter}
ிடாங்கப்பா," என்றாள் வீணா கிண்டலாக!
மற்றவர்களை போலவே அவளைப் பார்த்து புன்னகைத காஞ்சனா, "நல்ல வேளை எனக்கு ரெண்டு பசங்க தான்," என்றாள்!
"ஏன்????"