(Reading time: 20 - 39 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

லாபத்தை வைச்சிக்கிட்டு அப்புறமா ஸ்கூட்டரை ரெடி பண்ணி விக்கறத செஞ்சிட்டு இருந்தாரு அப்படியே படிப்படியா இப்ப மேல வந்து இப்ப மக்கள்கிட்ட புழங்கற டூவீலர்களை  2 வருஷமாதான் தயார்செய்றாரு. அதோட இப்பதான் 4 வீலர் அதாவது கார் மாதிரியான வண்டிகளை தயார் செய்ய முடிவு எடுத்திருக்காரு.

   

உனக்கு தெரியுமா எவ்ளோ பெரிய பேக்டரி தெரியுமா உனக்கு அதுல லட்சக்கணக்குல இல்லை கோடிக்கணக்குல பணம் கொட்டும். இன்னிக்கு வரைக்கும் சொத்தையும் பேக்டரியையும் கம்பெனி மற்றும் பல சொத்துக்களையும் பிரிக்காம அவர்கையிலயே எல்லாத்தையும் வைச்சிருக்காரு தாத்தா. இன்னும் கூட அவர் பேர்லதான் பேக்டரி டீலிங் எல்லாமே நடக்குது. 

   

எல்லா சொத்துக்களுமே அவர் பேர்லதான் இன்னிக்கு வரைக்கும் இருக்கு. பேரன்கள் பிறந்து வளர்ந்து நிர்வாகத்தை தாங்களே பார்க்கும் போது கூட இன்னிக்கு வரைக்கும் தன்னோட சொத்துக்களை பாகப்பிரிவினை செய்யாம வைச்சிருக்கார்னா பார்த்துக்க தாத்தாவோட புத்திசாலித்தனம்.

   

தாத்தாவோட சம்சாரம்தான் அருந்ததி. சரியான திமிர் பிடிச்சவங்க யாரையும் அவ்ளா சீக்கிரமா நம்பவேமாட்டாங்க வீட்ல அவங்க வைச்சதுதான் சட்டம் அவங்களும் பரம்பரை பணக்காரிதான் தாத்தா சைக்கிள் விக்கற பிசினஸ் முடிஞ்சி ஸ்கூட்டர் தயாரிப்புக்கு முன்னேறி வந்தப்ப அவரோட உழைப்பை மெச்சி பாட்டியை அவரோட அப்பா கட்டிவைச்சாங்க. அன்னியிலிருந்து இன்னிக்கு வரைக்கும் பாட்டியோட சட்டம்தான் அந்த வீட்ல செல்லுபடியாகற மாதிரி பாட்டி மாத்திக்கிட்டாங்க. 

   

அடுத்து தாத்தாவுக்கு 2 பையன்கள் இருக்காங்க மூத்தவர் பேரு மோகனசுந்தரம் நம்ம ரிஷிஅண்ணாவோட அப்பா ரொம்ப  நல்லவரு நேர்மையானவரு  யாரையும் எதிர்த்து பேசாதவரு. அவரோட மனைவி பவித்ரா பேசாமடைந்தைன்னே சொல்லலாம் இந்த வீட்ல மருமகளா வந்த நாள்ல இருந்து அவங்க அதிகமா பேசியே யாரும் பார்த்ததில்லை. பாட்டியோட டார்ச்சர்ல தன் பேச்சை இழந்து மௌனமாயிட்டாங்க.   

   

அடுத்து தாத்தாவோட இன்னொரு பையன் கேசவமூர்த்தி அண்ணன் மாதிரியே இவரும் நல்லவர்தான். அண்ணன் பேச்சை வேதவாக்கா நினைக்கறவரு அவரோட சம்சாரம் சுசித்ரா. 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.