(Reading time: 20 - 39 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

“ஆனா அவர்தான் கல்யாணம் செஞ்சிக்கறேன்னு சொல்றாரே”

   

“அம்மாடி அண்ணா உன் மேல ஆசைப்பட்டு லவ் பண்ணி கல்யாணம் செஞ்சிக்க தயார்னா நானே அதுக்கு ஏற்பாடு பண்றேன் ஆனா அதுக்காக வீட்ல இருக்கறவங்களையும் புதுசா வரப் போற 3 பொண்ணுங்களையும் திசைதிருப்ப உன்னை கேட்டதுதான் எனக்கு பிடிக்கலை. அது அநியாயமா. அது மட்டும் இல்லை அந்த வீட்ல அந்த 3 பொண்ணுங்களையும் கல்யாண புரோக்கர் கொண்டு வரலை. அந்த வீட்டு ஆளுங்க கொண்டு வராங்க தெரியுமா உனக்கு”

   

“என்ன அண்ணா சொல்றீங்க அவங்க வீட்டு ஆளுங்களேவா”

   

“ஆமாம் விவரமா சொல்றேன் கேளு எல்லாம் நான் விசாரிச்சிட்டு தான் உன்கிட்ட சொல்றேன். முதல் பொண்ணு பேரு சோனா எங்களை மாதிரி கம்பெனி நடத்தற இன்னொரு பிசினஸ்மேனோட ஒரே பொண்ணு ரிஷிண்ணாவோட அப்பா மோகனசுந்தரத்தோட வரவழைப்பு. எப்படியிருக்கும் பாரு அண்ணா சோனாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவங்க ரெண்டு பேர் ஒண்ணு சேர்றாங்களோ இல்லையோ எனக்கு தெரியாது ஆனா அவங்க பிசினஸ் ஒண்ணாயிடும் பிசினஸ்காகதான் இந்த கல்யாணம் நடந்த மாதிரியிருக்கும் அதனாலதான் அண்ணா வெறுக்கறாரு”

   

”ம்”

   

”அடுத்த பொண்ணு பேரு வந்தனா அண்ணாவோட அம்மா இருக்காங்களே பவித்ரா அவங்களோட வரவழைப்பு அவங்களைப்போலவே ரொம்ப சாதுவான குணம் அந்தம்மாவோட சொந்தம். பணம் குணம் அழகு எல்லாமே தாராளமா இருக்கு. ஆனா பவித்ராம்மா கிட்ட இருக்கற ஒண்ணு அந்த பொண்ணுகிட்ட கிடையாது”

   

“என்னது”

   

“பொறுமை அது அவள்கிட்ட சுத்தமா கிடையாது. எந்த இடத்திலும் அவள்தான் முதல்ல இருக்கனும் எல்லாரும் தன்னையே பாராட்டனும்னு அலையறவ வீட்லயே இருந்தாலும் சரி 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.