(Reading time: 20 - 39 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

அந்தம்மா ரொம்ப நல்லவங்க நல்ல நட்பா பேசுவாங்க. பாட்டிகிட்ட ஆரம்பத்தில எதிர்த்து பேசி பேசி எல்லார்கிட்டயும் திட்டு வாங்கி இப்ப அவங்க அமைதியாயிட்டாங்க பாட்டி என்ன சொன்னாலும் சரி காதுலயே போட்டுக்காம தன் வேலையை செய்வாங்க. அவங்களுக்கு இரண்டு பசங்க கருணாகரன் தினகரன். 

   

ரெண்டு பேருமே படிச்சவங்க திறமையானவங்க ஆனா கருணாகரன் பொறுப்பானவன் ஒரு நாள்ல 12 மணிநேரம் கம்பெனியில வேலைசெய்றவன் என்ன இருந்தாலும் அண்ணாவை போல திறமை கிடையாது. மீட்டிங் டீலிங் ஆர்டர் ஆஃபர்ன்னு எது வந்தாலும் எல்லாரும் அண்ணாவைத்தான் தேடுவாங்க. ஏன்னா அவர்தான் நிறைய லாபத்தை இந்த கம்பெனிக்காக தந்தவரு. கருணாவை போல பொழுதுக்கும் வேலை செய்யலைன்னாலும் மீட்டிங் டீலிங்க்னு அந்த வேலையை செய்து முடிப்பாரு. மீதி நேரம் வீட்ல இருப்பாரு. 

   

தினகரன் இருக்கானே அவன் சரியான சேட்டை பையன். பொறுப்பு ரொம்ப குறைவு எதிரி அதான் வெண்ணிலா இருக்காளே அவளோட அப்பன் எத்தனை ஷோரூம் திறக்கறானோ அத்தனை ஷோரூம்களையும் திறக்கனும்னு கங்கனம் கட்டிக்கிட்டு திறக்கறவன். அவங்களை விடு தாத்தாக்கும் பாட்டியை கண்டா பிடிக்காது. இருந்தாலும் வேற வழியில்லாம பொறுத்துக்குவாரு. 

   

அந்த வீட்ல தாத்தாவோட இயல்பா பழகறது யாருன்னா  சுசித்ரா சித்திதான். ஏன்னா சித்திக்கும் பாட்டியை பிடிக்காது அதனால தன் கூட்டணியில சேர்த்துக்கிட்டாரு தாத்தா. அதோட அண்ணாக்கு கூட பாட்டியை பிடிக்காது அவரோட அடக்குமுறை பிடிக்காததால தாத்தாவோடவே எப்பவும் இருப்பாரு. இதான் அவங்க வீடு. புரியுதா” என அவன் சொல்ல அவன் சொன்ன விவரங்களை மனதில் பதியவைத்து அதையே மறுபடியும் நினைத்து ஆராய்ந்தவள் மெதுவாக

   

”ம்” என தலையாட்டினாள்.

   

“அந்த மாதிரி வீட்ல நீ மருமகளா வாழனும்னா யாராவது ஒருத்தரோட சப்போர்ட் இருக்கனும் அது அண்ணாவா இருந்தா நான் சந்தோஷப்படுவேன் அதுக்காகதான் நானும் அவர்கிட்ட அப்ப அப்ப கேட்கறேன் ஆனா அவரும் முடிவு சொல்லாம மழுப்பிக்கிட்டே இருக்காரு. சரியா பதில் சொல்லமாட்டேங்கறாரு”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.