(Reading time: 20 - 39 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

“ஆமாம்”

   

“நம்புடா என்னை நம்பி உன் தங்கச்சியை கொடுடா நான் மகாராணி போல பார்த்துக்குவேன்”

   

“எப்படி உங்க பாட்டியிருக்கற அந்த வீட்ல அவங்க முன்னாடி என் தங்கச்சியை நீங்க மகாராணி போல பார்த்துக்குவீங்களா காமெடி பண்ணாதீங்கண்ணா”

   

"நீ சொல்றதும் சரிதான் அதுக்காக அவளை அப்படியே விட்டுடமாட்டேன்”

   

”நான் நம்ப மாட்டேன் போனை வைங்க இதோட 20 முறை போன் பண்ணி நந்தினி என்ன சொன்னாள்ன்னு கேட்டாச்சி இப்பவும் சொல்றேன் அவள் நாளைக்கு வந்தா அவள் மனசுல நீங்க இருக்கீங்கன்னு அர்த்தம் போதுமா”

   

“நீ எதையாவது சொல்லி அவள் மனசை மாத்தியிருந்தா”

   

“நான் எதையும் சொல்லலை உங்க வீட்டைபத்தி மட்டும் கொஞ்சம் மேம்போக்கா சொன்னேன்” என அர்ஜூன் சொல்ல அதைக்கேட்டு திடுக்கிட்டவன் அவசரமாக கத்தினான்

   

“உன்னை யார்டா அதையெல்லாம் சொல்லி அவளை பயமுறுத்த சொன்னது எல்லாம் போக போக அவளே புரிஞ்சிக்குவா”

   

“இது அநியாயம் அவள் பாவம் முதல்லயே உங்க வீட்டு லட்சணம் தெரிஞ்சாதானே அதுக்கு ஏத்த மாதிரி அவள் நடந்துக்குவா”

   

“நீ சொன்ன பின்னாடி அவள் என்னை தேடி வருவாளாடா” என்றான் சோர்ந்து போய் ரிஷி

   

“அதைப்பத்தி எனக்கு தெரியாது நீங்க நம்புங்க நம்பிக்கை வைங்க. வரலைன்னா அந்த 3 பொண்ணுங்கள்ல ஒருத்தியை கட்டிக்குங்க”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.