(Reading time: 20 - 39 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

முடியுமான்னு யோசி 1 மாசம் அங்க தங்கியிருக்கனும். 

   

தாத்தா வைக்கற போட்டியில நீ கலந்துக்கனும். ஜெயிக்கனும். அந்த 3 பொண்ணுங்களையும் சரி பாட்டியையும் சரி எதிர்த்து நிக்கனும். அண்ணா கையை பிடிக்கனும் ரொம்ப கஷ்டம். அண்ணா மாதிரி தாத்தா கிடையாது. அவர் ரொம்ப கண்டிப்பானவரு அவர் மனசை ஜெயிக்க பாட்டியாலயே முடியலை உன்னால முடியும்னு நீ நம்பினா இந்த போட்டியில கலந்துக்கிட்டு அண்ணாவை அடைய முடியும்னு உனக்கு தைரியம் இருந்தா சொல்லு. 

   

என் தங்கச்சின்னு சொல்லியே உன்னை நான் கூட்டிட்டு போய் விடறேன் தவறி கூட நீ அனாதை உனக்கு யாரும் இல்லைன்னு மட்டும் சொல்லி வைக்காத அதையே சாக்கா வைச்சி உன்னை விரட்டிடுவாங்க சரியா நான் இருக்கேன் உனக்கு என்னை நம்பு. ஆனா நல்லா யோசி நல்ல விதமா முடிவெடு. போட்டியில இறங்கின பின்னாடி பின் வாங்க கூடாது.”

   

“இந்த போட்டி எதுக்கு அண்ணா அத்தான் தன் மனசுல இருக்கறத தாத்தாகிட்ட சொல்லிட்டா பிரச்சனை முடியும்ல”

   

“அண்ணா லேட் பண்ணிட்டார்மா அதான் பிரச்சனை 5 வருஷமா அண்ணாக்கு கல்யாணம் பண்ணனும்னு இருந்தாங்க அண்ணாதான் சாக்கு போக்கு சொல்லி தள்ளி வைச்சாரு. உன்னை பார்த்தபின்னாடி உன்கூட வாழ ஆசைப்படறாரு. அதுக்குள்ள பாட்டி, அம்மா, அப்பா 3 பேரும் பொண்ணுங்களை பார்த்து ரெடியா வைச்சிட்டாங்க அதான் இப்ப பெரிய பிரச்சனையே இல்லைன்னா நானே தாத்தாகிட்ட பேசி உன்னையும் அவரையும் சேர்த்துவைப்பேன். இப்பகூட ஒண்ணும் கெட்டு போகலை நீ ம்ன்னு ஒரு வார்த்தை சொல்லு இப்பவே தாத்தாகிட்ட போய் பேசி கல்யாணம் முடிக்கறேன்”

   

“இல்லைண்ணா வேணாம் முதல்ல அத்தான் ஸ்டெடியா இருக்கனும் அவர் மனசுல என்ன இருக்குன்னு அவரேதான் சொல்லனும் அதுக்கு நான் அவர் கண்ணுமுன்னாடி இருந்தாதான் அவர் ஒத்துக்குவாரு எனக்காக பேசுவாரு என்னை பத்திரமா பார்த்துக்குவாரு. இருந்தாலும் நான் யோசிக்கனும் அண்ணா எனக்கு இந்த பணக்காரங்களோட குணத்தை பத்தி சரியா தெரியலை அத்தானோட குணமே எனக்கு அப்பப்ப புரியாது. இதுல அவரை மாதிரியிருக்கற ஆளுங்களோட 1 மாசம் நான் அங்க தனியா இருக்கனும் கொஞ்சம் பயமாயிருக்கு அண்ணா அதனால நான் யோசிச்சே சொல்றேனே” என கெஞ்சவும் அர்ஜூனும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.