”இவளும் அழகாதான் இருக்கா கவர்ச்சியாதான் இருக்கா அண்ணாவிட்ட சாபத்தின் படி இவள் கிடைச்சா நல்லாதான் இருக்கும் இல்லை இல்லை முதல்ல தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைச்சிடனும் அப்புறம்தான் நாம நம்ம கல்யாணத்தை பத்தி நினைக்கனும். அதுவரைக்கும் வெண்ணிலாவை சைட் அடிக்கறதுதான் சிறந்த வழி” என நினைத்துக்கொண்டே அவள் சென்ற திசையில் அவளை பார்த்தவாறே பின்னாடியே சென்றான் அர்ஜூன்.
அன்று வெண்ணிலா முழுவதும் எங்கெங்கு சென்றாளோ அங்கெல்லாம் 32 பல் தெரியும்படி சிரித்தவாறே அவளுக்கு ஹீரோ போல போஸ்கொடுக்க அவளுக்கு பற்றிக்கொண்டு வந்தது.
இதில் அவள் அன்று இரவே ஒரு பப்புக்கு சென்றாள். அங்கு ரிஷியை நினைத்து சோர்ந்து போய் மனக்கவலையை நீக்க முயன்றுக்கொண்டிருந்தாள். அவளது சோகத்தைக்கண்ட எவனோ ஒருவன் குடித்துவிட்டு அவள் மேல் விழ அவளும் அவனை தள்ளிவிட அவன் விடாமல் பிடிக்க பயம் வந்த வெண்ணிலாவுக்கு சட்டென யாரும் நினைவுக்கு வராமல் போக அர்ஜூனின் நினைவு வரவும் அவள் உடனே சுற்றி சுற்றி பார்த்தாள். அங்கு ஒரு இடத்தில் கோல்கேட் விளம்பர மாடல் போல் சிரித்த முகத்துடன் நின்று வெண்ணிலாவை பார்த்துக்கொண்டிருந்தவனிடம்
”யோவ் வாய்யா” என அழைக்க அவள் எப்போது அழைப்பாள் என காத்திருந்தவன் போல அவளிடம் சென்று நின்றான்
”என்னை இவன்கிட்டயிருந்து காப்பாத்து”
“சரி காப்பாத்தறேன் பதிலுக்கு எனக்கு என்ன தருவ”
“சீ இப்படி பேசறதுக்கு உனக்கு வெட்கமாயில்லை”
”ஏண்டி ஒரு பொண்ணு நீ நைட் 1 மணிக்கு இங்க வந்திருக்க நீ வெட்கத்தை பத்தி பேசறியா”
“சரி ஓகே சாரி போதுமா முதல்ல இவன்கிட்டயிருந்து என்னை காப்பாத்து”