(Reading time: 20 - 39 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

“கண்டிப்பா அவள் சரின்னு சொல்வா பாரு” என சந்தோஷமாக போனை வைத்தான் ரிஷி.

   

”இந்த அண்ணாவால ஏதோ வந்த தூக்கம் கூட வராம போயிடுச்சே இப்ப என்ன செய்றது ஒரு வேளை அண்ணா சொன்னமாதிரி நந்தினி மனசு மாறி வருவாளா” என அர்ஜூன் யோசித்துக்கொண்டே தன் தூக்கத்தை தொலைத்தான்.

   

அங்கு ரிஷியோ

   

”எனக்கு நந்தினி வேணும் எனக்கு நந்தினி வேணும்” என கண்ணாடி முன்நின்றுக்கொண்டு தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். பின்பு என்ன தோணிற்றோ அந்த கண்ணாடியில் இருந்த தன் பிம்பத்தை பார்த்து

   

”உனக்கு நந்தினி வேணும் உனக்கு நந்தினி வேணும்” என பல முறை சொல்லிவிட்டு சந்தோஷத்துடன் படுக்கையில் விழுந்தவனுக்கு தூக்கம் துளி கூட வரவில்லை.

   

ஹாஸ்டலில் நந்தினியின் நிலைமை முழுதும் கவலைக்கிடமாக இருந்தது. அண்ணனின் அறிவுரை ஒரு பக்கம் அத்தானின் அன்பு ஒருபக்கம் எதை தேர்ந்தெடுப்பது. அண்ணன் தன் நன்மைக்காகவே போராடுகிறான் அத்தான் தனக்காக போராடுகிறார் எந்த முடிவு எடுப்பது. அண்ணா சொல்வது போல ஜெயித்து அத்தான் கரம் பிடிக்கலாமா அத்தான் மனதில் இடம்பிடிப்பதை விட சுலபம் இந்த போட்டியில் ஜெயிப்பதா இல்லை இந்த போட்டியில் ஜெயிப்பதை விட அத்தான் மனதில் இடம்பிடிப்பது கடினமா எப்படி தெரிந்துக்கொள்வது 

   

நேரம் வேறு குறைவாக உள்ளது விடிந்ததும் அண்ணா வருவாரே நான் என்ன சொல்வேன் ஏது சொல்வேன் எனக்கு அத்தான் வேண்டும் ஆனால் அத்தான் என்னை எதற்காக வேண்டும் என நினைப்பதில்தான் சந்தேகமாக உள்ளது சரி பார்க்கலாம் அத்தானும் ஒரு முடிவு எடுத்திருப்பார். 

   

அவரின் முடிவு என்ன என்பதை பார்க்கலாம். அவரின் முடிவு வேறாக இருந்தால் நாம் ஒதுங்கிவிடலாம் நாம் நினைப்பதையே அவரும் நினைத்தால் துணிந்து போட்டியில் இறங்கலாம். ஒருவேளை அவர் என்னுடைய முடிவுக்காக காத்திருந்தால் என்ன செய்வது என 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.