புத்தியில்ல” என கத்த
”அவளை பத்தி தப்பா பேசாதீங்கண்ணா அவளை நான் கல்யாணம் பண்ணிக்கபோறேன்”
”என்னது” என ரிஷிக்கு நெஞ்சே அடைத்துக்கொண்டது.
”ஆமாம் எல்லாம் உங்களாலதான் நீங்க விட்ட சாபம்தான் உடனே பலிச்சிடுச்சி”
“நான் விட்ட சாபமா நிஜமாவாடா”
“ஆமாம் நீங்க காலையில எனக்கு வரப் போறவ வெண்ணிலாதான்னு நீங்கதானே சொன்னீங்க அது அப்படியே நடந்துடுச்சி சரியான கரிநாக்குண்ணா உங்களுக்கு” என அவன் கோபத்துடன் பேச ரிஷி சிரித்தான். அந்த சிரிப்பினால் மேலும் கோபமான அர்ஜூன்
”என்ன அண்ணா சிரிப்பா இருக்கா உங்களுக்கு”
“அதுக்கில்லைடா இத்தனை நாளும் நான் எதை சொன்னாலும் நடக்கல இன்னிக்கு நீ பண்ண காரியத்தால வயிறு எரிஞ்சி சாபம் விட்டேன் அது உடனே பலிச்சிடுச்சி அப்படின்னா நான் என்ன சொன்னாலும் நடக்குமா”
“ஆமாம்”
“அப்ப சரி நான் நந்தினியை வேணும்னு கேட்கப்போறேன் நடக்குதான்னு பார்க்கலாம்”
“உங்களுக்கே எப்படி நடக்கும் நீங்க சொன்னா மத்தவங்களுக்குதான் நடக்கும்”
“இல்லை நான் இப்ப நினைச்சிக்க போறேன் நீ போனை வை நல்லா ரெஸ்ட் எடு காலையில நந்தினியை கூட்டிட்டு வர்ற வழியைபாரு”
“அதுக்கு அவள் சரின்னு ஒத்துக்கிட்டாதான் நான் கூட்டிட்டு வருவேன்”