படுத்துறேன்.”
“அவங்க மட்டும் இல்லை ப்ரியம்வதா. உங்க வீட்டுல வேலை செய்றவங்க கிட்டேயும் நான் பேசனும்,” என்றாள் சக்தி.
“வீட்டுல வேலைக்குன்னு இரண்டுப் பேர் இருக்காங்க. எஸ்டேட்ல வேலை செய்றவங்க நிறைய பேர் சக்தி மேடம். அவங்க எல்லோரையும் பத்தி எனக்கே முழு விபரம் தெரியாது. மேனேஜர் கிட்ட கேட்டா அவர் விபரம் சொல்வாரு.”
“முதல்ல வீட்டுல வேலை செய்ற இரண்டுப் பேர் கிட்ட நாங்க பேசுறோம் ப்ரியம்வதா. அதுக்கு அப்புறமா எங்களை அந்த மேனேஜருக்கு இன்ட்ரோ செய்து வைங்க. நாங்க அங்கே இருந்து பார்த்துக்குறோம்.”
“சரி மேடம்!”
ப்ரியம்வதா இருவரையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.
சக்தி பக்கத்தில் உரசுவதுப் போல வந்த சத்யா, ரகசியக் குரலில் அவளிடம் பேசினாள்.
“உனக்கு டீம் வொர்க்ன்னா என்னன்னு தெரியலை சக்தி. இந்த கேஸ் முடிஞ்ச உடனே தனியா உனக்கு கிளாஸ் எடுக்குறேன்.”
“இப்போ எதுக்கு சம்மந்தமே இல்லாம இதை சொல்ற?”
“இரண்டு பேர் சேர்ந்து வேலை செய்யும் போது நான்-னு சொல்லக் கூடாது! நாம்-ன்னு சேர்த்து சொல்லனும்!”
“எதுக்கு இப்போ இந்த அறுவை?”
“ப்ரியம்வதா கிட்ட ‘நான்’ வேலை செய்றவங்க கிட்ட பேசனும்னு சொல்ற? நான் ஒருத்தி வீட்டுல வேலையை எல்லாம் விட்டுட்டு உன் கூட எதுக்கு வந்திருக்கேன்னு நினைக்குற?”