மற்றவர்களுக்கு தெரியாமல் வெட்கத்தை தடைப் போட்டு ஓரக் கண்ணால் அருகே மணக் கோலத்தில் இருந்தவனை பார்த்தாள்.
விஜய் கீதாவைப் போல ஓரக் கண்ணால் பார்க்க வேண்டிய அவசியமில்லாமல் முழு பார்வையையும் அவள் மீதே வைத்திருந்தான்!
ஏற்கனவே சிவந்திருந்த கீதாவின் முகம் அவனின் பார்வை உணர்ந்து மேலும் வெட்கத்தில் சிவந்தது!
“டேய் விஜய், ஒரே ஒரு நாள் நல்ல பிள்ளையா இரேன்! கல்யாணம் முடிஞ்ச அப்புறம் யாரும் உன்னை எதுவும் கேட்க மாட்டாங்க. இந்த பக்கம் திரும்பி உட்காருப்பா!”
சிவகாமி கெஞ்சாத குறையாக சொல்வது கீதாவிற்கும் தெளிவாக கேட்டது.
அவள் சிரிப்பை கட்டுப்படுத்த முயல, விஜய் அவளின் அருகே நெருங்கி அமர்ந்து,
“கீத்ஸ்,” என்று செல்லமாக அழைத்து அவளுக்கு கிட்டத்தட்ட ஹார்ட் அட்டாக்கையே கொடுத்தான்.
“ரொம்ப அழகா இருக்க கீத்ஸ்!”
காலையில் இருந்து அம்மா, பெரியம்மா தொடங்கி, எத்தனையோ பேர் சொல்ல கேட்டது தான் என்றாலும், இப்போது விஜய் அதையே சொல்லும் போது அது அவளுக்கு கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்தது!
“கெட்டி மேளம் கெட்டி மேளம்!”
யாரோ குரல் கொடுக்க, அதற்காகவே காத்திருந்த மங்கள இசை ஒலித்தது.
விஜய்யின் கையில் தாலி எடுத்து கொடுக்கப் பட, அவன் சந்தோஷம் பொங்க கீதாவின்