கழுத்தில் அந்த மங்கள நாணை அணிவித்தான்.
இனி அவள் அவனின் மனைவி!
கடந்த சில மாதங்களாகவே கனவு கண்டு வந்த வினாடி! அருகே இருந்த ‘கணவனின்’ மீது முன்பை விட அன்பும் காதலும் அவளுள் பெருகியது.
மற்ற சம்பிரதாயங்கள் தொடர, விஜயும் கீதாவும் ஒவ்வொரு வினாடியையும் ரசித்து அனுபவித்தனர். இது அவர்களுக்கான ஸ்பெஷல் நாள் அல்லவா!!!
🌼🌸❀✿🌷
மாலையில் நடைப்பெற்ற திருமண ரிசெப்ஷனின் போதும் அதே ‘ஓவர் தே க்ளவுட்’ மனநிலையில் தான் கீதாவும், விஜயும் இருந்தார்கள்.
“கீதா அமெரிக்கால இருக்க ரமேஷ் அண்ணாவால கல்யாணத்திற்கு வர முடியலையாம். உன் கிட்ட பேசனும்னு சொல்றான்.”
கையில் திணிக்கப்பட்ட மொபைலை வாங்கி கீதா பேசும் போது, தியாகு எதேச்சையாக அவளின் கண்ணில் பட்டான்.
அவனின் பார்வை வேறு பக்கம் இருந்தது!
ஆனாலும், தியாகுவின் முகத்தில் இருந்த ஏதோ ஒன்று அவளுக்கு புதிதாக இருந்தது.
அப்படி என்ன பார்க்கிறான் என்று தியாகுவின் பார்வை இருந்த பக்கம் பார்த்த கீதா திகைத்து தான் போனாள்!!!
அங்கே கிருத்திகா வேறு சில பெண்களுடன் இருந்தாள்!
ஒருவேளை கிருத்திகாவை அவன் பார்க்கவில்லையோ??? வேறு யாரையேனும்