தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 35 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
கீதாவிற்கு அந்த பெரிய கவர்களில் இருப்பது என்ன என்று புரியவில்லை!
“என்னது இதெல்லாம்?” என கிருத்திகாவிடமே கேட்டாள்.
“எல்லாம் உங்க பாப்பாக்கு வாங்கின டாய்ஸ்,” என்றாள் கிருத்திகா!
“இவ்வளுவுமா???’
“இது கம்மி தான்! நான் போன கடையில ஜஸ்ட் பார்ன் பேபிக்கு நிறைய டாய்ஸ் ஆப்ஷன் இல்லை. அங்கே இருந்தது எல்லாம் மட்டும் வாங்கிட்டு வந்தேன்!” மற்ற நேரங்களில் இருந்து மாறுப்பட்டு, சிறுமியைப் போல ஒலித்தது கிருத்திகாவின் குரல்!
கீதா வேறு கிரகத்தில் இருந்து வந்த ஒருத்தியை பார்ப்பது போல அவளைப் பார்த்தாள்.
கடந்த ஒரு வருடத்தில் கிருத்திகாவை கீதா பார்த்த நேரங்கள் மிகவும் குறைவு. சனி, ஞாயிறு என்ற பாகுபாடில்லாமல் கிட்ட தட்ட இருபத்தி நான்கு மணி நேரமும் வேலை வேலை என அலைந்துக் கொண்டே தான் இருந்தாள் அவள். அண்ணன்மார்கள் மூவரும் விழுந்து விழுந்து கவனிப்பதால் ஏதோ சாப்பிடுகிறாள் என்று தான் சொல்ல வேண்டும்.
காதலுக்கு மரியாதை ஷாலினி & அண்ணன்மார்கள் போல தான் கிருத்திகாவும் விஜய், சிவா மற்றும் விஷ்ணுவும். பயங்கர பாச மழை!
கீதா தேவை இல்லாமல் எந்த விஷயத்திலும் மூக்கை நுழைப்பவள் இல்லை என்பதாலும், சிவகாமியுடன் அவளுக்கு நல்ல உறவு ஏற்பட்டிருந்ததாலும், அவள் இதைப் பற்றி அதிகமாக யோசிக்கவில்லை.
விஜயுடன் தனியாக இருக்கும் போது மட்டும் அவனை பாசக்கார அண்ணன் என்று கிண்டல் செய்வாள். அவனும் அதை சாதாரணமாகவே எடுத்துக் கொள்வான்.
மனதில் ஓடிய எண்ணங்களின் காரணமாக கீதா அமைதியாக இருக்கவும்,