(Reading time: 7 - 14 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

   

“என்னடா இவளுக்கு கூட பாசமெல்லாம் இருக்கான்னு யோசிக்குறீங்களா? உங்க மேல பெரிசா அதெல்லாம் இல்லை ஆனால் இந்த பேபி என் அண்ணாவோட பேபி ஆச்சே! ஸோ பாப்பா மேல ரொம்ப பாசம் இருக்கு,” என்று அவளுக்கு தன் ஸ்பெஷல் பாணியில் விளக்கமளித்தாள் கிருத்திகா.

   

“அது நீங்க சொல்லாமலே புரியுது. ஆனால் இவ்வளவு விளையாட்டு எதுக்குன்னு யோசிக்குறேன்,” என்று கீதாவும் பெரிய ரியாக்ஷன் இல்லது இலகுவாகவே  சொன்னாள்.

   

“உண்மையா சொல்ல போனா எதை வாங்குறதுன்னு தெரியலை. அதனால எல்லாத்தையும் வாங்கினேன்!”

   

கீதா என்ன பதில் சொல்வது என்று யோசித்த நேரம்,

   

“ஹாய் கீதா எப்படி இருக்க?” எனக் கேட்டப்படி தியாகு வீட்டின் உள்ளே வந்தான்.

   

கீதாவின் எதிரே இருந்த கிருத்திகாவை பார்த்து ஆச்சர்யப் பட்ட தியாகு, உடனேயே சுதாரித்துக் கொண்டு,

   

“விஜய் இல்லையே உனக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமான்னு கேட்க வந்தேன் கீதா... எனக்கு முன்னாடியே ஹெல்ப் வந்திருச்சு போலிருக்கே,” என்றான் கிருத்திகாவை பார்த்து!

   

“ஹலோ, யாரை பார்த்து ஹெல்ப்ன்னு சொல்றீங்க? குழந்தைக்கு டாய்ஸ் கிஃப்ட் செய்ய வந்தேன், எனக்கு யாருக்கும் எடுபிடி செய்ய வேண்டிய அவசியமில்லை,” என்று அவளுடைய பாணியில் சட்டென்று பொரிந்து தள்ளினாள் கிருத்திகா!

   

“ஓ, சாரிங்க மேடம் உங்களை பார்த்து நான் தப்பா நினைச்சுட்டேன்,” என்றான் தியாகு ஒரு பெரிய புன்னகையுடன்.

   

அந்த புன்னகை கிருத்திகாவின் கோபத்தை இன்னும் கிளறி விட்டது!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.