உங்களை பார்த்த உடனே ரொம்ப நாள் பழகினது போல ஒரு ஃபீலிங்,” என்றான் தியாகு முகத்தில் இருந்த புன்னகை மாறாமலே!
“ஓ காட்! இவர் உங்க சொந்தக்காரரா? இப்படி சீப்பா பீகேவ் செய்றார்!”
கிருத்திகா கீதாவை பார்த்து சொல்ல, கீதா தியாகுவைப் பார்த்து முறைத்தாள்.
“கீதா கீதா முறைக்காதே!” என கீதாவிடம் சொன்ன தியாகு, கிருத்திகாவிடம், “சாரி சாரிங்க உங்க பேரு...” என சொல்லி இழுத்தான்!
“ஹாங் மண்ணாங்கட்டி!”
அனல் கக்கும் பார்வையுடன் கிருத்திகா சொல்லவும், “மண்ணாங்கட்டியா? இது கூட நல்லா தான் இருக்கு ஷார்ட்டா எம்.கேன்னு கூப்பிடலாம்ன்னு நினைக்கிறேன்,” என அசராமல் பதில் சொன்னான் தியாகு!
“யெஸ் மிஸ்டர் குரங்கு உன் மண்டையில இருக்குறது தானே அது! ஸ்டுபிட்,” என்ற கிருத்திகா, கீதாவிடம்,
“நான் கிளம்புறேன்,” என்று சொல்லிவிட்டு, கீதா ஏதோ சொல்ல வருவதை கூட கவனிக்காமல் வேகமாக நடந்து சென்றாள்.
அவள் போவதையே சின்ன சிரிப்புடன் பார்த்திருந்த தியாகு, கிருத்திகா பார்வையில் இருந்து மறைந்த பின் தான் பார்வையை திருப்பினான்.
அங்கே கீதா பத்ரகாளியாக நின்றிருந்தாள்!
“என்ன செஞ்சு வச்சிருக்கீங்க நீங்க? அவருக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்!”
“எவர், உன்னோட அவர் தானே? விஜயை நான் கவனிச்சுக்குறேன். நீ கவலைப் படாதே,” என இப்போது கூலாகவே பதில் சொன்னான் தியாகு!