“என்னண்ணா ஆச்சு உனக்கு??? ஆனாலும் இப்படியா ஒரு பொண்ணு கிட்ட நடந்துக்குறது? தப்புண்ணா!”
தியாகு ஓர் சில வினாடிகள் அமைதியாக இருந்தான். பின்,
“யெஸ் கீதா தப்பு தான். ஆனால் அவ கோபப்படுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் அதான் அப்படி பேசினேன்,” என்றான் கண்களில் மெல்லிய மயக்கம் மின்ன!
“இது அதை விட தப்பு! எப்போ இப்படி ரோட்டோர ரோமியோ போல பேச ஆரம்பிச்ச? கிருத்திகா சொன்னது சரி! ரொம்ப சீப் பீஹேவியரா இருந்தது!”
“ஹேய் ஹேய் கீதா, அப்படி எல்லாம் சொல்லாதே! சரி, உன் கிட்ட நேராவே உண்மையை சொல்றேன். எனக்கு கிருத்திகாவை ரொம்ப பிடிச்சிருக்கு, அவ அம்மா அப்பா கிட்ட எங்களுக்குள்ளே மேரேஜ் பத்தி பேசி பார்க்குறீயா?”
“என்னது??? அண்ணா.... உங்களுக்கு... அவ...”
கீதா என்ன சொல்வது என்று திக்கித் திணற, தியாகு, “அவளை பத்தி எனக்கு நல்லா தெரியும் கீதா. ஒரு வருஷமா உன் அன்பு விஜய் மூலமா அவளை பத்தி எல்லா விபரத்தையும் தெரிஞ்சுகிட்டேன். எனக்கு அவளுடைய இந்த டைனமிக் கேரக்டர் ரொம்ப பிடிச்சிருக்கு,” என்று இப்போதும் அதே ‘கூல்’ தோரணையில் சொன்னான் தியாகு!
கீதாவால் தான் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை!
“உனக்கு பிடிச்சிருக்கு, சரிண்ணா! ஆனால் பெரியம்மாக்கு பிடிக்குமா? இப்போ உன் கிட்ட பேசின மாதிரி அவங்க பெரியம்மா கிட்ட பேசினா எப்படி இருக்கும்?”
“நான் பேசின பேச்சுக்கு தானே கீதா அவ அப்படி பதில் சொன்னா! ட்ரிகர் செய்தது நான் தானே?”