“என்ன இளிப்பு வேண்டி இருக்கு? அறிவில்லை?”
“இல்லைங்க, உங்க கிட்ட இருந்தா கொஞ்சம் கொடுங்களேன்!”
“ஹேய் குரங்கு என்ன விட்டா பேசிட்டே போற?”
“யார் நான் குரங்கா? எந்த மரத்துல நான் தாவுரதை பார்த்தீங்க மேடம்? ஆனாலும் பரவாயில்லை, உங்களைப் போல ஒரு அழகானப் பொண்ணு சொன்னா அதையும் கூட ஒத்துக்கலாம் தப்பில்லை!”
“ஹேய் ஸ்டுபிட் என்ன பேசுற? பார்த்தா படிச்சவன் மாதிரி இருந்துட்டு இப்படி பேசுற! முதல் தடவை பார்க்குற பொண்ணு கிட்ட இப்படி தான் நடந்துப்பீயா நீ?”
கீதா அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த பேச்சை வார்த்தையை கொஞ்சம் திகைப்புடன் கவனித்துக் கொண்டிருந்தாள்.
தியாகு இப்படி எல்லாம் பேசுவான் என்பதே அவளுக்கு நம்ப முடியாததாக இருந்தது!
கூடவே கிருத்திகா அவனை ஒருமையில் அழைத்ததும், அதை கேட்டு தியாகு ஏதோ டூத்பேஸ்ட் அட்வர்டைஸ்மென்டில் நடிப்பவனைப் போல் புன்னகைத்துக் கொண்டிருந்ததும் அவளுக்கு எக்ஸ்ட்ரா அதிர்ச்சியாக இருந்தது!
தன் கல்யாணத்தின் போது பார்த்த காட்சி இப்போது பல மாதங்களுக்கு பின் மீண்டும் அவளின் நினைவுக்கு வந்தது!
கீதா தனக்குள் யோசனையில் இருக்க, மற்ற இருவரும் தங்களின் அனல் + ஐஸ் பறக்கும் உரையாடலை தொடர்ந்துக் கொண்டிருந்தனர்.
“ஓ! நாம இப்போ தான் முதல் தடவை சந்திக்குறோமா?? சாரிங்க, அது என்னவோ எனக்கு