கதைகளிலே கேட்ட பெண்ணா... திரும்பி திரும்பி பார்க்கிறேன்...
உதித் நாராயணின் கொஞ்சும் தமிழ் மண்டபத்தில் இருந்த பல பல ஸ்பீக்கரில் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது.
அவளுள் இருந்த கேள்வி பெரிதானது! ஆனால், விஜய் அவளிடம் வேறு ஏதோ பேசவும், அவளின் கவனம் திசை மாறிப் போனது!
🌼🌸❀✿🌷
அதன் பின், கீதாவிற்கு தியாகுவை கவனிக்க என்ன, நினைக்க கூட நேரம் கிடைக்கவில்லை!
தொடர்ந்து வந்த நாட்களில் அவளுக்கு விஜயை தவிர வேறு ஒரு உலகம் இருக்கிறது என்பது கூட மறந்து தான் போனது!
விஜயின் காதல் கலந்த அன்பு மழையில் அவள் மொத்தமாக தன்னை மறந்துப் போயிருந்தாள்.
தியாகு என்று ஒருவன் இருப்பது கூட அவளுக்கு நினைவில் இருந்தால் ஆச்சர்யம் தான்.
நாட்கள் செல்வது கூட அவளுக்கு புரியும் முன்பே அவர்களின் வாரிசு ஸ்ரேயா பிறந்திருந்தாள்.
விஜயை ஜெராக்ஸ் காப்பி எடுத்தது போல இருந்த அந்த பச்சிளங் குழந்தையை பார்க்க பார்க்க தெவிட்டாமல் ரசித்துக் கொண்டிருந்தாள் கீதா.
ஹாஸ்பிட்டலில் இருந்து குழந்தையுடன் அவள் வீட்டிற்கு வந்த பின் அவசர வேலையாக மும்பை சென்றிருந்தான் விஜய்.
அத்தனை வருடங்களாக வளர்ந்த வீட்டில், அம்மா அப்பாவுடன், கையில் பூவாய் சிரிக்கும்