பார்க்கிறானோ??
இல்லை என்று அவனின் பார்வை உறுதி படுத்தியது! இமைக்கவும் மறந்து விட்டவனாக கிருத்திகாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான் தியாகு!
சில நாட்களுக்கு முன் விளையாட்டாக தியாகுவிடம் கிருத்திகா பற்றி சொன்னதும், அதற்கு அவளின் அம்மா மறுத்து சொன்னதும் நினைவில் வந்தது!
தியாகு மனசுக்கும் அவன் அம்மா மனசுக்கும் ஏத்த மாதிரி மகாலட்சுமி போல ஒரு பொண்ணு வந்து அவங்க வீட்டுல குத்துவிளக்கு ஏத்தி வைப்பா!
தியாகுவிற்கு சரி, ஆனால் பெரியம்மாவிற்கு????
துளசி மாடத்தில் குரோட்டன்ஸா?
இதெல்லாம் சரியாக வருமா?
“ஹேய் கீத்ஸ்??? என்ன தனியா கனவு கண்டிட்டு இருக்க? என்னையும் ஜோடி சேர்த்துக்கோ!”
விஜயின் குரல் கீதாவின் யோசனைக்கு தடைப் போட்டது.
“இல்ல வந்து...” என்று தடுமாறியப்படி மீண்டும் தியாகு பக்கமே பார்த்தாள் கீதா!
அவளின் பார்வை போன பக்கம் பார்த்த விஜய்,
“அட நம்ம மச்சான்! அப்படி எங்கே பார்க்கிறான்??? பொண்ணுங்க பக்கமா??? அட அவனும் கிளீன் போல்ட் ஆகிட்டான் போல இருக்கே! இதுக்கு தானா இதே பாட்டை திரும்ப போட சொன்னான்! இப்போ தான் சிவாவை கூப்பிட்டு ஏன் ஒரே பாட்டு ரிபீட் ஆகுதுன்னு கேட்டேன்.”
கீதா அப்போது தான் பாடல் பாடிக் கொண்டிருப்பதை கவனிக்கவே செய்தாள்!