“மீட் செய்திருக்கேன். அதிகம் பேசினது இல்லை!”
“வினாயக் இதை செய்திருப்பார்ன்னு நீங்க நினைக்குறீங்களா?”
ஸ்ரீனிவாஸ் மற்ற கேள்விகளுக்கு உடனுக்கு உடன் பதில் சொன்னதைப் போல இதற்கு பதில் சொல்லவில்லை. அவனின் கண்கள் ப்ரியம்வதாவிடம் போனது.
ஸ்ரீனிவாஸும் வினாயக் தான் குற்றவாளி என்று நினைக்கிறான் ஆனால் அதை ப்ரியம்வதா முன் சொல்ல தயங்குகிறான் என்பது சக்திக்கு புரிந்தது. இருந்தாலும் ப்ரியம்வதா பக்கத்தில் இல்லாத நேரத்தில் இதே கேள்வியை மறுபடியும் இவனிடம் கேட்க வேண்டும் என்று மனதுக்குள் குறிப்பெடுத்துக் கொண்டாள்.
“அதை விடுங்க! நீங்க எதோ பிஸ்னஸ் செய்றீங்கன்னு ப்ரியம்வதா சொன்னாங்க. எங்கே சென்னையிலயா?”
“ஆமாம் மேடம்.” ஸ்ரீனிவாஸ் தன் பர்ஸில் இருந்து விசிட்டிங் கா
...
This story is now available on Chillzee KiMo.
...
்போ நீங்க சொல்லி தான் தெரியும்.”
“ஓகே ஸ்ரீனிவாஸ், தாங்க்ஸ். வேற ஏதாவது கேள்வி இருந்தா உங்களை காண்டாக்ட் செய்றேன்.”
“இங்கே வந்து கேட்கனும்னு கூட இல்லை மேடம். கார்ட்ல என் மொபைல் நம்பர் இருக்கு. எதுவா இருந்தாலும் எனக்கு கால் செய்ங்க. வினாயக் இந்த கேஸ்ல இருந்து ரிலீஸ் ஆக நான் வேற ஏதாவது செய்யனும்னா கூட சொல்லுங்க. ஐ ஆம் ரெடி டு ஹெல்ப்.”