“அப்படி ஹெல்ப்ன்னு எதுவும் இப்போ இல்லை. கொலை செய்ய யூஸ் செய்ததா சொல்லப் படுற ட்ரோன் இன்னும் போலீஸ்க்கு கிடைக்கலை. அது கிடைக்காத வரைக்கும் வினாயக் மேல இருக்குறது எல்லாமே வீக் ஆதாரங்கள் தான்.”
“அப்போ உடனே அதைக் கண்டுப்பிடிச்சு அழிச்சிடனும். அதுக்கு மேல வினாயக் சுதந்திரமா இருக்கலாம்” ஸ்ரீனிவாஸின் உடனடி பதில் சக்திக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது.
“வினாயக் குற்றவாளியோ இல்லையோ ரிலீஸ் ஆகணும்னு ரொம்ப ஆர்வமா இருக்கீங்க போலருக்கு??”
“அந்த கொலை நடந்த நாள்ல இருந்து ப்ரியம்வதா சரியா சாப்பிடுறது இல்லை, தூங்குறது இல்லை. அவங்களுக்காகவாவது அவர் ரிலீஸ் ஆனா நல்லது!”
“உண்மையான குற்றவாளி யாருன்னு கண்டுப்பிடிச்சா கூட போதும். தாங்க்ஸ் ஸ்ரீனிவாஸ்.” சக்தி நகர, ப்ரியம்வதாவும் அவளுடன் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
“உங்களைப் பார்த்தா ஸ்மார்ட் ஆனவங்களா தெரியுது. நீங்களாவது புரியாம பெனாத்திட்டு இருக்கவங்களுக்கு புரியுற மாதிரி எடுத்துச் சொல்லுங்க. அந்த வினாயக் ஒரு பைத்தியம். அவன் பேசினாலே கிறுக்கு மாதிரி ரோபோட், மெஷின்னு மட்டும் பேசுவான். நல்ல வேளை அவனோட பைத்தியக்காரத் தனத்தை இந்த வீட்டுல காட்டாம போனான். அந்த ரோபோவை அனுப்பி இந்த வீட்டுல இருக்கவங்களை சுட வைக்க அவனுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?