சத்யா தோசை சுட்டுக் கொண்டிருக்க சக்தி தன் வழக்கமாக சமையல் மேடை மேலே அமர்ந்திருந்தாள். அஹல்யா சேரை சமையலறை பக்கமாக இழுத்துப் போட்டு அமர்ந்திருந்தாள்.
திடீரென்று ஒலித்த காலிங் பெல் மூன்று பெண்களையும் ஆச்சர்யப்படுத்தியது.
“அவர் வர லேட் ஆகுமே, இப்போ யாரு?” சத்யா கேட்கும் போதே ஷாலினி ஓடி வந்தாள்.
“ஜன்னல்ல பார்தேன்ம்மா, டாக்டர் அங்கிள் வந்திருக்கார்!”
“ஓஓஓஓஓஓஒ! யாரோ யாரையோ தேடி வந்திருக்காங்க போலருக்கு!” சத்யா சக்தியைப் பார்த்து கேலியாக சிரித்தாள்.
சக்தி பக்கத்தில் இருந்த தோசைக் கரண்டியை எடுத்துக் காட்டி மிரட்டினாள். அப்போது காலிங் பெல் மீண்டும் ஒலித்தது.
“டாக்டருக்கு பொறுமையே கிடையாது போலருக்கு! சக்தி அஹல்யாவை தொந்தரவு செய்யாதே. நீ இந்த தோசையை திருப்பி போடு. நான் டாக்டருக்கு என்ன வேணும்னு கேட்டுட்டு வரேன்!” சத்யா போட்டு சென்ற கட்டளையை நிறைவேற்ற சக்தி மீண்டும் கரண்டியை கையில் எடுத்தாள். அதற்குள் அஹல்யா அவள் பக்கம் வந்து கரண்டியை வாங்கிக் கொண்டாள்.
“நான் செய்றேன் மேம். சத்யாக்கா சொல்ற மாதிரி எப்போவும் உட்கார்ந்தே இருக்க முடியுமா?” அஹல்யா கரண்டியால் ஈசியாக தோசையை திருப்பி போடுவதை பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி.
“தேங்க்ஸ் அஹல்யா. உன் அக்கா வந்து கத்துறதுக்கு முன்னாடி நீ போய் திரும்ப உட்கார்ந்திரு!”