(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 38 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ங்கே வீட்டுல இருந்து நாம ஃப்ரீயா பேச முடியாது அண்ணி,” என்று கிருத்திகா சொல்லத் தொடங்கிய நேரம்,

   

“பொரியல் செஞ்சுட்டீயா கீதா,” என்றபடி அங்கே வந்தாள் சிவகாமி.

   

யோசனையை கை விட்டு,

   

“செஞ்சுட்டேன் அத்தை,” என்ற கீதா ‘என்ன செய்வது’ என்பதுப் போல கிருத்திகாவைப் பார்த்தாள்.

   

அவசரமாக முடிவெடுத்து,

   

“அம்மா அந்த டாக்டர் கிளினக் ஏ.சி’யில இவ்வளவு நேரம் இருந்ததுல லேசா தலை வலிக்குற மாதிரி இருக்கு. நான் கொஞ்ச நேரம் வெளியே வாக்கிங் மாதிரி போயிட்டு வரட்டுமா?” என்றுக் கேட்டாள் கிருத்திகா.

   

“போயிட்டு வாடா. இதுக்கெல்லாம் என் கிட்ட கேட்கனுமா என்ன?” என்று உடனே அனுமதி வழங்கினாள் சிவகாமி.

   

“அவங்க தனியா போக வேண்டாமே, நானும் துணைக்கு போயிட்டு வரட்டுமா அத்தை?” என கீதா கேட்கவும்,

   

“நல்ல ஐடியா தான். இரண்டுப் பேரும் போயிட்டு வாங்க,” என்று உடனே சம்மதம் சொன்னாள் சிவகாமி.

   

சிவகாமியிடம் விடைப் பெற்று விட்டு, கீதாவும், கிருத்திகாவும் ஒன்றாக கிளம்பினார்கள்.

   

சாலையின் ஓரம் நடக்க தொடங்கிய முதல் சில நிமிடங்கள், கீதா எதை எதை எப்படி சொல்வது என்று மனதினுள் பட்டியலிட்டப் படி அமைதியாக நடக்க, கிருத்திகாவும் அமைதியாகவே இருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.