பின் திடீரென பேசிய கிருத்திகா,
“சாரி அண்ணி, ஏதோ யோசனையில் இருந்தேன். சொல்லுங்க, உங்களுக்கு என்னைப் பத்தி என்ன தெரியும்?” எனக் கேட்டாள்.
அந்த கேள்வியில் நிறைந்து இருந்த அதிகப்படியான ஆர்வம் புரிந்ததால், அதற்கு மேலும் அமைதியாக இருந்து கிருத்திகாவின் பொறுமையை சோதிக்காமல்,
“நீங்க ரொம்ப ஸ்மார்ட்! ரொம்ப வொர்க்கஹாலிக். நீங்க வொர்க் செய்துட்டு இருந்த க்யூ.என்.ஹெச் கம்பெனியோட ஹெட் ஆகனும் என்பது உங்க கனவு,” என்றாள் கீதா!
“என்னது???” என்றான் கிருத்திகா ஆச்சர்யமும், அத்ரிசியும் சமவிகிதத்தில் கலந்து!
“ஆமாம், அப்படி தான் உங்க அண்ணா சொல்லி இருக்கார். ரொம்ப சின்ன வயசிலேயே சேல்ஸ் டைரக்டர் ஆன உங்க ஆம்பிஷன் அந்த கம்பெனி சி.இ.ஓ ஆகுறது தான்.”
“அது ப்ரைவேட் கம்பெனி இல்லையா? இப்படி எல்லாம் ஆசை இருந்தா அந்த ஓனர் உதைக்க மாட்டாரா?”
“அவர் மேனேஜிங் டைரக்டரா இருக்கார். எனக்கு தெரிஞ்ச வரைக்கும், எல்லாம் ஸ்மூத்தா போயிருந்தா இன்னும் ஒரு அஞ்சு, பத்து வருஷத்துல உங்க ஆம்பிஷனை எட்டியும் பிடிச்சிருப்பீங்க.”
“வாவ்! ரியல்லி!” என்று வியந்த கிருத்திகா, மெல்ல சுதாரித்துக் கொண்டு,
“ப்ச்... என்ன நீங்க, இதை எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க! இதைப் பத்தி எல்லாம் பொறுமையா கேட்டு தெரிஞ்சுக்குறேன். ராஜ் பத்தி சொல்லுங்களேன்,” என்றாள்.
கிருத்திகாவின் கேள்வியில் இருந்த ஆர்வமும், காதலும் கீதாவை ஆச்சர்யப் பட வைத்தது.