உங்களை அங்கே அனுப்பி வச்சாங்க!”
“ஹ்ம்ம்... என்ன தான் சண்டை போட்டு கல்யாணம் செய்திருந்தாலும், இரண்டு வருஷத்துல, ராஜோட சார்ம்க்கு எல்லாம் சரியாகி இருக்கனுமே?”
கிருத்திகா கேட்ட விதத்தில் அவள் பக்கம் பார்த்த கீதா, “இதுக்கு நான் என்ன சொல்ல? நீங்க தான் பதில் சொல்லனும்,” என்றாள் மென்மையாக!
“உங்களுக்கு எதுவுமே தெரியாதா???? அந்த ஓட்ட வாய் விஜய் அண்ணா உங்க கிட்ட கட்டாயம் ஏதாவது சொல்லி இருப்பாரே???!”
கீதா கிருத்திகாவை ஒரு பார்வை பார்த்தாள்!
“சரி சரி லுக் விடாதீங்க. நிஜமாவே எதுவும் தெரியாதா?”
“ரொம்ப தெரியாது. ஆனால், உங்க ஈகோ தான் பிரச்சனைன்னு அவர் சொல்லி இருக்கார்.”
“அதானே பார்த்தேன்! அண்ணாவாவது உங்க கிட்ட எதுவும் சொல்லாமல் இருப்பதாவது!”
“உங்க...”
கீதா பதில் சொல்ல தொடங்கிய நேரம், அவர்களுக்கு வெகு அருகே கிரீச்சிட்டு நின்றது அந்த கார்.
அதிலிருந்து பணக்கார களையுடன் பெரியவர் ஒருவரும், இளைஞன் ஒருவனும் இறங்கி அவர்களின் அருகே வந்தார்கள்.
கீதாவிற்கு அவர்களை அடையாளம் தெரிந்தது.
“இவர் தான் க்யூ.என்.ஹெச் கம்பெனி ஓனர் சுதர்ஷன். அது அவரோட மகன்! உங்க கல்யாணத்துக்கு இரண்டுப் பேரும் வந்திருந்தாங்க!”