“அப்போ, எங்க கல்யாணம் உடனேயே நடந்திருச்சா? நான் ஒன்னும் சொல்லலையா?”
அந்த கல்யாண பேச்சு தொடங்கிய போது கிருத்திகாவால் வீட்டில் நடந்த கலவரங்கள் கீதாவிற்கு நினைவில் வந்தது! தியாகுவை திருமணம் செய்துக் கொள்ள மாட்டேன் என்று ஒற்றை காலில் நின்று அடம் பிடித்த கிருத்திகாவை பற்றி என்ன சொல்வது?
“என்ன அண்ணி ஒன்னும் சொல்லாமல் இருக்கீங்க? கத்தி ஆர்ப்பாட்டம் செய்து வீட்டையே இரண்டாக்கிட்டேனா????” என்றாள் கிருத்திகா!
கீதா அப்போதும் பதில் சொல்லாது அமைதியாகவே இருந்தாள். அந்த அமைதியே தான் நினைத்தது தான் சரி என்று எடுத்து சொல்லி விட, கிருதிகாவின் முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றியது.
“அப்புறம் எப்படி அண்ணி கல்யாணம் நடந்தது?”
“மாமா ரொம்ப ஸ்ட்ராங்கா தியாகுக்கு சப்போர்ட் செய்தார். உங்க அண்ணா எல்லாம் அவர் பேச்சுக்கு எதிர் பேச்சு பேச மாட்டாங்கன்னு உங்களுக்கே தெரியுமே! அவங்க எல்லோரும் உங்க பக்கம் தான் ஆனால் மாமா பேச்சுக்கு எதிர்த்து பேச முடியாமல் இருந்தாங்க.”
“ஓஹோ! அப்பா ஏன் அப்படி பிடிவாதமா இருந்தார்ன்னு தெரியுமா?”
“ஹுஹும்... அது பத்தி எனக்கு தெரியாது.”
“சரி, அப்பாவோட பிடிவாதம் ஜெயிச்சு எங்க கல்யாணம் நடந்தது. ஆனால் கல்யாணத்துக்கு அப்புறம் இந்த தனி வீடு, மத்தபடி எங்களுக்குள் இருக்கும் பிரச்சனை???”
“அதைப் பத்தி எல்லாம் எனக்கு ரொம்ப தெரியலை. உங்க அண்ணாக்கே சில விஷயங்கள் தெரியாதுன்னு நினைக்கிறேன். அந்த தனி வீடு கல்யாணம் முடிவான போதே அரேன்ஜ் செய்தது தான். நான் முன்னாடியே சொன்னது போல பெரியம்மாவே சந்தோஷமா தான்