“வினாயக் ஒரு ஷூட்டிங் ட்ரோனுக்கான பேடன்ட் வச்சிருக்கான்.”
“ஒ!” என்ற சக்திக்கு இன்ஸ்பெக்டர் போகும் திசை புரிந்தது.
❀✿❀✿❀✿
போலீசிற்கு தேவையான அனைத்து விபரங்களையும் கொடுத்து விட்டு அங்கிருந்து விலகி வந்தப் பிறகு, சக்தியிடம் விசாரித்தாள் சத்யா.
“அவர் ட்ரோன் டிசைன் செக் செய்யனும்னு சொன்னதுக்கு என்ன அர்த்தம் சக்தி?”
“இந்த ட்ரோன் வினாயக் டிசைன் செய்த ட்ரோன் டிசைனோட ஒத்துப் போகுதான்னு எக்ஸ்பர்ட்ஸ் வச்சு செக் செய்துப் பார்க்கப் போறாங்களாம்!”
“ஒத்துப் போனா?”
“அப்போ வினாயக் தான் இந்த ட்ரோனை டிசைன் செய்தாருன்னு கன்ஃபார்ம் ஆயிடும். அவரோட சொந்த டிசைன் ஆச்சே!”
“ஒரு நிமிஷம் இரு சக்தி,” என்ற சத்யா வேலையில் ஈடுப்பட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் அபினவிடம் ரகசியமாக எதுவோ சொல்லிவிட்டு வந்தாள்.
அவள் அபினவிடம் ‘அப்டேட்’ கொடுக்க சொல்கிறாள் என்பது புரிந்ததால் சக்தி கேள்வி எதுவும் கேட்கவில்லை!
❀✿❀✿❀✿
எதிர்பார்த்ததுப் போன்றே, மூன்று மணி நேரம் கழித்து அபினவ் சத்யாவின் மொபைலில் தொடர்புக் கொண்டான்.