தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 39 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“கீர்த்ஸ், என்னால நம்பவே முடியலை! அப்பா சொன்னார் உனக்கு பழசெல்லாம் நினைவில்லைன்னு... இட் வாஸ் அ பிக் ஷாக் டு மீ டூ,” என்றார் க்யூ.என்.ஹெச் கம்பெனியின் தலைவர் சுதர்ஷன்!
“ஆமாம் கீர்த்ஸ்! நீங்க வந்துட்டீங்கன்னு தெரிஞ்சு ரொம்ப சந்தோஷப் பட்டேன். ஆனால் அம்னீஷியான்னு தெரிஞ்ச உடனே ஹார்ட் அட்டாக்கே வந்திருச்சு. வை டோன்ட் யூ விசிட் அவர் ஆஃபிஸ் ஒன் டே. உங்க கேபின் பார்த்தாலே உங்களுக்கு எல்லாம் நினைவுக்கு வந்திரும்,” என்றான் அவரின் மகன் கார்த்திக்!
இருவரின் பேச்சிற்கும் மரியாதை நிமித்தம் புன்னகைத்த கிருத்திகா,
“ஆஃபிஸ்க்கு வரதை பத்தி நான் இன்னும் யோசிக்கவே இல்லை! எனக்கு இன்னும் எல்லாம் சரியா புரியலை. ஐ நீட் மை ஹஸ்பன்ட்’ஸ் ஹெல்ப். அவருக்கும் டைம் இருக்கும் போது வரோமே,” என்றாள் பணிவுடன்!
“என்ன பேசுறீங்க கீர்த்ஸ்! உங்க ஸோ கால்ட் ஹஸ்பன்ட் உங்க லீக்ல இல்லை என்பது எல்லோருக்கும் தெரியுமே! நீங்க எப்போ வரீங்கன்னு சொல்லுங்க, நான் வந்து உங்களை பிக்கப் செய்துக்குறேன். வை ஷுட் யூ ஆஸ்க் ஹிம்?”
அந்த இளைஞன் சொன்னதை கேட்டு கிருத்திகாவினுள் கோப அலைகள் எழுந்தன! அவன் இந்த அளவிற்கு பேச காரணமாக இருக்கும் ‘ஓல்ட் கிருத்திகாவின்’ மீதும் அவளுக்கு கோபமாக வந்தது!
ஆனாலும் மரியாதை நிமித்தம் அமைதியாக இருப்பதாக வெளியில் காட்டிக் கொண்டு,
“இல்லை, பரவாயில்லை, ராஜ் கிட்ட சொன்னா அவரே எனக்காக எல்லாம் அரேஞ் செய்வார். தாங்க்ஸ்...” என்றாள் மென்மையாக.
“கார்த்திக் சொல்றதிலேயும் நல்ல பாயின்ட் இருக்கு கீர்த்ஸ். ஒரு நாள் உன் கேபின் விசிட் செய்து தான் பாரேன். எனக்கு தெரிஞ்சு அப்போ எல்லாம் ஒவ்வொரு நாளும் ஆல்மோஸ்ட்